புயல் எச்சரிக்கை: எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ. 29) விடுமுறை?
புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(நவ. 29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபென்ஜால் புயல் நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காரைக்கால்-மாமல்லபுரம் இடையே ஃபென்ஜால் புயல் கரையைக் கடக்கும்.
புயல் எதிரொலி; பூங்காக்கள், கடற்கரைக்குச் செல்ல வேண்டாம்: சென்னை மாநகராட்சி!
புயல் கரையைக் கடக்கும் போது ஒருசில இடங்களில் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். வட தமிழக கடலோர மாவட்டங்களில் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். சென்னை, புறநகர் பகுதிகளிலும் நாளை ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(நவ. 29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்- பள்ளி, கல்லூரிகள்.
கள்ளக்குறிச்சி- பள்ளி, கல்லூரிகள்.
காஞ்சிபுரம்- பள்ளி, கல்லூரிகள்.