செய்திகள் :

புயல் எதிரொலி; பூங்காக்கள், கடற்கரைக்குச் செல்ல வேண்டாம்: சென்னை மாநகராட்சி!

post image

பூங்காக்கள், கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபென்ஜால் புயல் நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காரைக்கால்-மாமல்லபுரம் இடையே ஃபென்ஜால் புயல் கரையைக் கடக்கும்.புயல் கரையைக் கடக்கும் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் கனமழை பெய்யும். விழுப்பும், கடலூர், புதுச்சேரியிலும் கனமழை பெய்யக்கூடும்.

புயல் கரையைக் கடக்கும் போது ஒருசில இடங்களில் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டில் தரைக்காற்று 70 கி.மீ. வேகத்தில் வீசும். காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், மாவட்டங்களிலும் தரைக்காற்று 70 கி.மீ. வேகத்தில் வீசும். வட தமிழக கடலோர மாவட்டங்களில் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக்கூடும். சென்னை, புறநகர் பகுதிகளிலும் நாளை ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 80 கி.மீ வேகம் வரை காற்று வீசலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், கட்டுமானத் தளங்களில் உள்ள உயர் கிரேன்கள், விளம்பர பதாகைகளை பாதுகாப்பாக கீழே இறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் உள்ள கடற்கரையில் பொதுமக்கள் கூடவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை முழுவதும் உள்ள பூங்காக்களை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புயல் காற்றின் வேகத்திற்கு ஏற்ப ரயில் சேவையில் மாற்றம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது

வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், திருப்பூர் மாவட்டம் பல... மேலும் பார்க்க

புயல் எதிரொலி: விளம்பர போர்டுகளை அகற்ற வேண்டும்

ஃபென்ஜால் புயல் காரணமாக கட்டுமானத் தளங்களில் உள்ள கிரேன்களையும், விளம்பர போர்டுகளை பாதுகாப்பாக கீழே இறக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள ச... மேலும் பார்க்க

சென்னை கடற்கரைச் சாலை - ஓ.எம்.ஆரில் நாளை பொது போக்குவரத்து நிறுத்தம்

புயல் கரையைக் கடக்கும் போது சென்னை ஓ.எம்.ஆர். மற்றும் ஈசிஆர் சாலையில் நாளை பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்... மேலும் பார்க்க

புயல் எதிரொலி: அண்ணா பல்கலை. பருவத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

புயல் எதிரொலியால் அண்ணா பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபென்ஜால் புயல் நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்தி... மேலும் பார்க்க

ஃபென்ஜால் புயலின் வேகம் அதிகரிப்பு

ஃபென்ஜால் புயலின் வேகம் மணிக்கு 15 கிலோமீட்டர் ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு மிக அருகில் 250 கி.மீ. தொலைவில் புயல் தற்போது மையம் கொண்டுள்ளது. முன்னதாக மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிலையில், தற... மேலும் பார்க்க

புயல் எச்சரிக்கை: எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ. 29) விடுமுறை?

புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(நவ. 29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபென்ஜால் புயல் நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என இந்திய வான... மேலும் பார்க்க