செய்திகள் :

புயல் எதிரொலி: விளம்பர போர்டுகளை அகற்ற வேண்டும்

post image

ஃபென்ஜால் புயல் காரணமாக கட்டுமானத் தளங்களில் உள்ள கிரேன்களையும், விளம்பர போர்டுகளை பாதுகாப்பாக கீழே இறக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஃபென்ஜால் (FENGAL) புயல் 30.11.2024 அன்று கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை கடற்கரைச் சாலை - ஓ.எம்.ஆரில் நாளை பொது போக்குவரத்து நிறுத்தம்

எனவே, “அனைத்து கட்டுமான நிறுவனங்களும் தங்களது கட்டுமானத் தளங்களில் உள்ள கிரேன்கள் மற்றும் உயர்ந்த இடத்தில் உள்ள உபகரணங்கள் காற்றின் காரணமாக ஆடுவதலோ அல்லது விழுவதாலோ, விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இதனைத் தவிர்க்க கிரேன்களை கீழே இறக்கி வைக்குமாறும் அல்லது உறுதியாக நிலைநிறுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், விளம்பரப் போர்டுகள் வைத்திருக்கும் அனைவரும் தங்களது விளம்பர போர்டுகளை பாதுகாப்பாக இறக்கி வைக்குமாறும் அல்லது புயல் காற்றினால் விளம்பரப் போர்டுகள் சாயவோ அல்லது விழாமலோ இருக்கும் வகையில் உறுதிபடுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்துகிறது.” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருப்பூரில் மூவா் கொலை: தலைவா்கள் கண்டனம்

திருப்பூரில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் படுகொலை செய்யப்பட்டுள்ளதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், த... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. தூத்துக்குடி முத்தையாபுரத்தை சோ்ந்த சுப்பையா மக... மேலும் பார்க்க

ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது

வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், திருப்பூர் மாவட்டம் பல... மேலும் பார்க்க

சென்னை கடற்கரைச் சாலை - ஓ.எம்.ஆரில் நாளை பொது போக்குவரத்து நிறுத்தம்

புயல் கரையைக் கடக்கும் போது சென்னை ஓ.எம்.ஆர். மற்றும் ஈசிஆர் சாலையில் நாளை பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்... மேலும் பார்க்க

புயல் எதிரொலி: அண்ணா பல்கலை. பருவத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

புயல் எதிரொலியால் அண்ணா பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபென்ஜால் புயல் நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்தி... மேலும் பார்க்க

ஃபென்ஜால் புயலின் வேகம் அதிகரிப்பு

ஃபென்ஜால் புயலின் வேகம் மணிக்கு 15 கிலோமீட்டர் ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு மிக அருகில் 250 கி.மீ. தொலைவில் புயல் தற்போது மையம் கொண்டுள்ளது. முன்னதாக மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிலையில், தற... மேலும் பார்க்க