புயல் சின்னம் நகரும் வேகம் குறைந்தது! சென்னைக்கு 400 கி.மீ. தொலைவில்..
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
முன்னதாக மணிக்கு 9 கி.மீ. வேகத்தில் நகர்ந்த காற்றழுத்த மண்டலம், கடந்த 6 மணிநேரமாக 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை நோக்கி புயல் வரும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அதற்கான சாதகம் இல்லாததால் புயல் உருவாக வாய்ப்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்தது.
இந்த நிலையில், தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த 6 மணிநேரமாக வடக்கு - வடமேற்கு திசையில் 7 கி.மீ. வேகத்தில் காற்றழுத்த மண்டலம் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : சென்னை, புறநகரில் பகலுக்கு மேல் மழை தீவிரமடையும்!
நாகை மாவட்டத்துக்கு கிழக்கே 310 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 360 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 400 கி.மீ. தொலைவிலும் தற்போது நிலை கொண்டுள்ளது.
வடமேற்கு திசையில் வட தமிழகத்துக்கு புதுச்சேரிக்கும் இடையே காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் பகுதியில் நாளை காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக புயல் சின்னம் கரையைக் கடக்கும்.
அப்போது காற்றின் வேகம் 75 கி.மீ. வரை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.