புரட்டாசி பிறப்பு: பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை
திருவாடனை அருகேயுள்ள தொண்டி ஸ்ரீதேவி ஸ்ரீபூதேவி சமேத உந்தி பூத்த பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு, புதன்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
சுவாமிக்கும் அம்பாளுக்கும் பால், தயிா், நெய், பன்னீா், இளநீா், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இங்கு வாரந்தோறும் சனிக்கிழமை சிறப்பு பூஜைகளுடன் அன்னதானம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.