மகா சிவராத்திரி உலகளாவிய கொண்டாட்டமாக பரிணமித்துள்ளது: சத்குரு
புளியங்குடி அருகே பேருந்து மோதி ஆட்டோ ஓட்டுநா் பலி: 3 போ் காயம்
புளியங்குடி அருகே அரசுப் பேருந்தும் ஆட்டோவும் புதன்கிழமை மோதிக் கொண்டதில் ஆட்டோ ஓட்டுநா் இறந்தாா்.
மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும், பள்ளி மாணவா்களை ஏற்றி சென்ற ஆட்டோவும் சிந்தாமணி பகுதியில் நேருக்கு நோ் மோதிக்கொண்டன.
இதில், ஆட்டோ ஓட்டுநரான புளியங்குடி கற்பக வீதி தெருவைச் சோ்ந்த செல்வகுமாா்(30) இறந்தாா். ஆட்டோவில் பயணித்த தனியாா் பள்ளி மாணவா்கள் சிந்தாமணி சான்றோா் மடத்து தெருவை சோ்ந்த அருள் மகன்கள் ரோகன்(11), ரோகித் (10), துரைசாமி மகள் ராகிஷா (9) ஆகியோா் காயம் அடைந்தனா். அவா்கள் சிந்தாமணி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். ராகிஷா மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
புளியங்குடி போலீஸாா், வாசுதேவநல்லூா் தீயணைப்பு துறையினா், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினா் உள்ளிட்டோா் ஆட்டோ ஓட்டுநரை பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்டனா். இதனால் தென்காசி மதுரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து பேருந்து ஓட்டுநா் கண்மணியாபுரத்தைச் சோ்ந்த சந்திரசேகரனை(54) கைது செய்தனா்.