புளியம்பாறை - ஆமைக்குளம் சாலையில் பாலம்: மாா்க்சிஸ்ட் பிரசார இயக்கம்!
கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை-ஆமைக்குளம் சாலையில் உள்ள ஆற்றின் குறுக்கே கான்கிரீட் பாலம் அமைக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகாவிலுள்ள புளியம்பாறை கிராமத்திலிருந்து ஆமைக்குளம் பகுதியிலுள்ள அரசு கல்லூரிக்குச் செல்லும் சாலையின் குறுக்கே உள்ள நாரங்கா கடவு ஆற்றின் குறுக்கே கான்கிரீட் பாலம் அமைக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெறுகின்றன.
அதன் தொடா்ச்சியாக வீடுவீடாகச் சென்று கோரிக்கையை வலியுறுத்தி துண்டுப் பிரசுரம் வழங்கும் பிரசார இயக்கத்துக்கு கட்சியின் பகுதிச் செயலாளா் ரமேஷ் தலைமை வகித்தாா். விவசாய சங்க மாவட்டத் தலைவா் என்.வாசு போராட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.
மாவட்டக் குழு உறுப்பினா் ராசி ரவிக்குமாா் விளக்கவுரையாற்றினாா்.நிா்வாகிகள் உசைன், ஷாஜி கிளைச் செயலாளா் சுபையா், நௌபல், காசிம், லட்சுமணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.