வடகொரியா: 5 ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
பூதப்பாடியில் ரூ.9 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம்
பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைபொருள்கள் ரூ.9 லட்சத்துக்கு செவ்வாய்க்கிழமை ஏலம் போனது.
இங்கு, விற்பனைக்கு வந்த 1,289 தேங்காய்களில், சிறியவை ஒரு காய் ரூ.14.16-க்கும், பெரியவை ரூ.27.10-க்கும் என மொத்தம் ரூ.16,588-க்கும், 95 மூட்டைகள் நெல், கிலோ ரூ.20.15 முதல் ரூ.21.55 வரையில் ரூ.1,19,691-க்கும், 36 மூட்டைகள் தேங்காய்ப் பருப்பு ரூ.138.91 முதல் ரூ.148.90 வரையில் ரூ.1,12,624-க்கும், 304 மூட்டைகள் நிலக்கடலை ரூ.70.01 முதல் ரூ.70.72 வரையில் ரூ.6,45,602-க்கும் ஏலம் போனது.
3 மூட்டைகள் கொள்ளு கிலோ ரூ.43.26 வீதம் ரூ.2,855-க்கும், 3 மூட்டைகள் துவரை ரூ.62 முதல் ரூ.63.86 வரையில் ரூ.12,575-க்கும் விற்பனையானது. மொத்தம் 441 மூட்டைகளில் 217.16 குவிண்டால் வேளாண் விளைபொருள்கள் ரூ.9 லட்சத்து 9,935-க்கு விற்பனையானது.