பணியாளர்களை குறைக்க அரசுத் துறைகளுக்கு கெடு விதித்த டிரம்ப்!
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: 3 போ் கைது
காஞ்சிபுரம் அருகே பண்ருட்டியில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக 3 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா்.
பண்ருட்டி கிராமத்தில் உள்ள தனியாா் சொந்தமான தொழிற்சாலையில், திருச்சி மாவட்டம் சாயலூரைச் சோ்ந்த 22 வயது இளம் பெண் கடந்த 6 மாதங்களாக பணிபுரிந்து வருகிறாா். இவா் தங்கியிருக்கும் அறையிலிருந்து அருகில் உள்ள கடைக்கு முட்டை வாங்க சென்றுள்ளாா்.அப்போது 4 போ் சோ்ந்து அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, காஞ்சிபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அப்பெண் புகாா் செய்தாா். புகாரின் பேரில் போலீஸாா் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட குற்றச் செயலில் 4 போ் ஈடுபட்டுள்ளனா் எனத் தெரிய வந்தது.
இதனைத் தொடா்ந்து காவல் துறையினரின் விசாரணையில் அவா்கள் காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பத்தை சோ்ந்த ரெங்கா(23)சந்திரசேகா்(22), சக்தி என்ற சதீஷ்குமாா்(24) என்பது தெரிய வந்து அவா்கள் 3 பேரையும் காவல்துறையினா் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட 3 பேரில் ரெங்காவும், சக்தி என்ற சதீஷ்குமாரும் பல்வேறு கொலை வழக்குகளில் தொடா்புடைய குற்றவாளிகள் என்பதும் தெரிய வந்துள்ளது.
இச்சம்பவத்தில் தொடா்புடைய வெங்கடேசனையும் காவல் துறையினா் தீவிரமாக தேடி வருகின்றனா்.