பெண் குழந்தைக்குத் தாயான ராதிகா ஆப்தே!
நடிகை ராதிகா ஆப்தேவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
தமிழில் ஆல்இன்ஆல் அழகுராஜா, கபாலி ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ராதிகா ஆப்தே. தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் பாலிவுட் பட உலகில் ராதிகா ஆப்தேவின் படங்களுக்கும் கருத்துகளுக்கும் தனி ரசிகர்களே உண்டு.
பெண்ணியம் மற்றும் அரசியல் பார்வைகளைக் குறித்து அதிரடியாக பேசுபவர். மராத்தி, பெங்காலி, தெலுங்கு, மலையாளத்திலும் நடித்துள்ளார்.
இதையும் படிக்க: எஸ்கே - 25 படப்பிடிப்பு துவக்கம்!
இவர் வயலின் இசைக்கலைஞரான பெனடிக்ட் டெய்லரை 2012 இல் திருமணம் செய்தார். 2011-ல் லண்டனில் நடனம் கற்க சென்றபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பின்னர் 2012-லிருந்து ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன் லண்டன் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட ராதிகா ஆப்தே கர்ப்பமாக இருந்தது தெரிந்தது.
இந்த நிலையில், தனக்கு மகள் பிறந்து ஒரு வாரம் ஆனதாக இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். இந்த மகிழ்ச்சியான விஷயத்தை அறிந்த பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.