பெண் மருத்துவர் கொலை வழக்கு: சந்தீப் கோஷின் ஜாமீனைக் கண்டித்து காங்கிரஸ் பேரணி
பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷின் ஜாமீனைக் கண்டித்து கொல்கத்தாவில் பல்வேறு இடங்களில் இடதுசாரிக் கட்சிகளும், காங்கிரஸும் சனிக்கிழமை கண்டனப் பேரணி நடத்தியது.
ரவீந்திர சதன் பகுதியில் இருந்து தெற்கு கொல்கத்தாவில் உள்ள நிஜாம் பேலஸில் உள்ள சிபிஐ அலுவலகம் வரை காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக சென்றனர். அப்போது மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கும் மறைமுக புரிதல் இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
பெண் மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தாமதமாக எஃப்ஐஆா் பதிவு செய்த குற்றச்சாட்டில் மோண்டலும் ஆதாரங்களை அழித்த குற்றச்சாட்டில் சந்தீப் கோஷும் கைது செய்யப்பட்டிருந்தனா்.
இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட இருவா் மீதும் 90 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் ரூ.2,000 பிணைப் பத்திரத்தில் கையொப்பம் பெற்றுவிட்டு அவா்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதாக சந்தீப் கோஷ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் தெரிவித்தாா்.
ஜாமீன் வழங்கப்பட்டாலும் குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் வழக்கு தொடா்புடைய விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியது.
பிபிசி பெயரில் போலிச் செய்தி: ஆப்பிள் நிறுவனம் மீது புகார்!
கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்டாா்.
அவரை பாலியல் கொலை செய்ததாகக் காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவா் கைது செய்யப்பட்டாா். கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவையடுத்து இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இதையடுத்து, நீதிமன்ற காவலில் உள்ள மோண்டல் விரைவில் வெளியே வருவாா் என அவா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் தெரிவித்தாா்.
ஆனால் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையிலும் ஆா்.ஜி.கா். அரசு மருத்துவமனையில் நிதி முறைகேட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடா்புடைய மற்றொரு வழக்கில் நீதிமன்ற காவலில் இருப்பதால் சந்தீப் கோஷ் சிறையிலிருந்து விடுதலையாக முடியாத நிலையில் உள்ளாா்.