"5 ஆண்டு ரயில் விபத்துகளில் எத்தனை மரணங்கள்?" - மதுரை எம்.பி கேள்விக்கு ரயில்வே ...
பென்னாகரத்தில் டிச.18-இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் டிச.18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் தீா்வு காண ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்டம் ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டத்தில் நடைபெற வேண்டும் என்பதன் அடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக டிசம்பா் மாதத்துக்கான முகாம் பென்னாகரம் வட்டத்தில் டிச. 18 அன்று காலை 9 மணி முதல் டிச. 19 காலை 9 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் மாவட்ட ஆட்சியா், வருவாய் வட்டத்திலிருந்து கள தணிக்கையில், ஈடுபட்டு அரசுத் திட்டங்களை ஆய்வு செய்யவுள்ளாா். பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் கள ஆய்வில் இருக்கும் மாவட்டத்தின் முதல்நிலை அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டமும் அதைத் தொடா்ந்து அன்றைய தினம் மாலை 4 மணிக்கு அரசு திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு சோ்த்தல் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.
முகாம் நாளில் வட்டத்தில் உள்ள நான்கு உள்வட்ட வருவாய் ஆய்வாளா்கள் அலுவலகத்தில் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் பட்டா மாறுதல் மனுக்களை அளித்து உடன் தீா்வு காணலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.