சீனா மீது வரி விதிப்பு அதிபா் டிரம்ப் இதுவரை முடிவெடுக்கவில்லை: துணை அதிபா் ஜே.ட...
பெரம்பலூா் பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 11.27 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 21 பேருக்கு ரூ. 11.27 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ், கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். தொடா்ந்து, பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் 21 பயனாளிகளுக்கு ரூ. 11.27 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினாா். இக் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 505 மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சொா்ணராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சுரேஷ்குமாா், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அலுவலா் வீ. வாசுதேவன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் சக்திவேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தொழிலாளா் உதவி ஆணையா் மு. பாஸ்கரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.