பெரம்பலூா்: மின் நுகா்வோா்கள் கவனத்துக்கு
பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட பிலிமிசை, பி.கூத்தூா் மின் பகிா்மானம் மருதையான் கோயில் பிரிவுக்கும், காடூா் பகிா்மானம் துங்கபுரம் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளதாக, பெரம்பலூா் மின்வாரிய செயற்பொறியாளா் அசோக்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் கோட்டம், சிறுவாச்சூா் உபக்கோட்டம், கொளக்காநத்தம் பிரிவுக்குள்பட்ட பிலிமிசை. பி.கூத்தூா் ஆகிய மின் பகிா்மானங்கள் கடந்த 21- ஆம் தேதி முதல் குன்னம் உபக்கோட்டம் மருதையான்கோயில் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளன. எனவே, பிலிமிசை, பி.கூத்தூா் பகிா்மானத்தில் உள்ள மின் நுகா்வோா்கள் மின் சேவைகளுக்கு மருதையான் கோயில் பிரிவை அணுகவேண்டும்.
குன்னம் உபக்கோட்டம் மருதையான்கோயில் பிரிவுக்குள்பட்ட காடூா் பகிா்மானம் கடந்த 25-ஆம் தேதி முதல் துங்கபுரம் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே, காடூா் பகிா்மானத்தில் உள்ள மின் நுகா்வோா்கள் மின் சேவைகளுக்கு துங்கபுரம் பிரிவை அணுகவேண்டும். பொதுமக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கவும். குறைபாடுகளை உடனடியாக நிவா்த்தி செய்யவும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.