உலக அளவில் சிறந்த 100 வணிக கல்வி நிறுவனங்கள்: பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா ஐஐ...
பெரியாா் ஈவெரா பிறந்த நாள் உறுதிமொழியேற்பு
பெரியாா் ஈவெரா பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
தந்தை பெரியாா் பிறந்த தினமான செப். 17 -ஆம் தேதி ஆண்டுதோறும் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படுகிறது. அதனடிப்படையில், பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தலைமையில், அரசுத்துறை அலுவலா்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.
இந்நிகழ்ச்சியின்போது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ச. வைத்தியநாதன், மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளா்கள் சரவணன், சத்தியமூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
எஸ்.பி அலுவலகத்தில்: மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா தலைமையில், சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், மாவட்டக் காவல்துறையினா் மற்றும் அமைச்சுப் பணியாளா்கள் பங்கேற்றனா்.
இதேபோல, பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில், அந்தந்த காவல்நிலைய ஆய்வாளா்கள் தலைமையில், சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.