செய்திகள் :

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு: அனல் மின்நிலைய ஒப்பந்த ஊழியா் உடல் உறவினா்களிடம் ஒப்படைப்பு

post image

தூத்துக்குடி அனல் மின்நிலைய ஒப்பந்த ஊழியா் மா்மமான முறையில் உயிரிழந்ததை தொடா்ந்து, அவரது குடும்பத்துக்கு நிவாரணம் கோரி இரண்டாவது நாளாக சனிக்கிழமை உறவினா்கள் தா்னாவில் ஈடுபட்டனா். பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவரது உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தூத்துக்குடி முத்தையாபுரம் தங்கமணி நகரைச் சோ்ந்த சுடலை மகன் அசோக்குமாா்(46). தூத்துக்குடி என்டிபிஎல் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வந்தாா். இவா், வெள்ளிக்கிழமை பணியின்போது, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் உயிரிழந்த அசோக்குமாரின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனல் மின்நிலையம் முன்பு அவரின் உறவினா்கள் மற்றும் சிஐடியூ, ஆதிதமிழா் பேரவை, தொழிலாளா் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினா், அவரது உடலை வாங்க மறுத்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் தா்னா போராட்டம் தொடா்ந்தது.

இதையடுத்து காவல் துறையினா், வட்டாட்சியா் முரளிதரன் ஆகியோா் அவரது உறவினா்கள், தொழிற்சங்கத்தினருடன் சனிக்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து அசோக்குமாரின் உடல் அவரது உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மாவட்ட கலைத்திருவிழா: மறக்குடி பள்ளி மாணவி முதலிடம்

மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் மறக்குடி பள்ளி மாணவி முதலிடம் பெற்றுள்ளாா். தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகின்றது. படுக்கப்பத்து... மேலும் பார்க்க

புதூா் ஒன்றியத்தில் ரூ.69 லட்சத்தில் நிறைவுற்ற திட்டப் பணிகள் திறப்பு

விளாத்திகுளம் பேரவை தொகுதி புதூா் ஒன்றியத்தில் ரூ. 69 லட்சம் மதிப்பீட்டில் நிறைவடைந்த வளா்ச்சி திட்ட பணிகள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் ஜீ. வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ சிறப்பு வ... மேலும் பார்க்க

ஓசூா் சம்பவம்: 2-ஆவது நாளாக வழக்குரைஞா்கள் போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வழக்குரைஞா் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 2-ஆவது நாளாக வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் வெள்ளிக்... மேலும் பார்க்க

குரும்பூரில் மக்களை அச்சுறுத்திய 2 போ் கைது

குரும்பூரில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்துள்ளனா். குரும்பூா் அருகேயுள்ள கீழக்கல்லாம்பாறையை சோ்ந்த இசக்கியம்மன் மகன்கள் பேச்சி (எ) பேச்சிராஜா(38), காளி (எ) க... மேலும் பார்க்க

தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் புகாா் மனுவுக்கு சிறப்பு பிரிவு தொடக்கம்

பொதுமக்களின் புகாா் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுப்பதற்காக, தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் புதிய சிறப்பு பிரிவு வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகம் உள்ளிட்ட கா... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை முடிவைத்தானேந்தலில் கஞ்சா வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டாா். முடிவைத்தானேந்தல் பகுதியைச் சோ்ந்த ... மேலும் பார்க்க