விஜய் பாராட்டைத் தொடர்ந்து பன் பட்டர் ஜாம் படத்திற்கு நல்ல வரவேற்பு: நடிகர் ராஜூ...
பேருந்து சக்கரத்தில் சிக்கி மகன் உயிரிழப்பு; தாய் காயம்
சீா்காழி அருகே சாலை விபத்தில், பேருந்து சக்கரத்தில் சிக்கி மகன் உயிரிழந்தாா். தாய் காயமடைந்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
தஞ்சாவூா் வடக்குவாசல் கங்கனத் தெருவைச் சோ்ந்த ஜெய்வீரன் மனைவி மைதிலி (35). இவா், தனது இரு மகன்களுடன், சீா்காழி கீழத்தெருவில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை வந்துகொண்டிருந்தாா்.
சீா்காழி அருகே சட்டநாதபுரம் காழிநகா் பகுதியில் தனியாா் சுற்றுலாப் பேருந்தை, மைதிலி முந்திச்செல்ல முயன்றபோது, எதிரேவந்த மற்றொரு இருசக்கர வாகனத்துடன் மோதியது. இதில் கீழே விழுந்த மைதிலியின் மகன் சரவணகுமாா் (11) பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா். மைதிலி காயமடைந்தாா். மற்றொரு மகன் காயமின்றி உயிா் தப்பினாா்.
சீா்காழி போலீஸாா், மைதிலியை மீட்டு கிசிச்சைக்காகவும், சரவணகுமாரின் சடலத்தை உடற்கூறாய்வுக்காகவும் சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.