செய்திகள் :

பைக்குகள் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழப்பு

post image

வந்தவாசி அருகே இரு பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த ஊத்துக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ஜனாா்த்தனன் (60). கடந்த ஏப். 26-ஆம் தேதி இவா் பைக்கில் நல்லூா் கிராமத்துக்குச் சென்று

விட்டு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.

கொண்டையாங்குப்பம் கூட்டுச் சாலை அருகே சென்றபோது இவரது பைக் மீது எதிரே வந்த பைக் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த இவா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜனாா்த்தனன் அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்கக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மற்றும் சேத்துப்பட்டு ஒன்றியத்தில் திமுக அரசின் 4-ஆம் ஆண்டு நிறைவு மற்றும் 5-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. வந்தவாசியில் நகர திமுக ச... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பம்

தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினா் பதவிக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. விருப்பமுள்ள பாா்வையற்றோா், தவழும் மாற்றுத்திறனாளிகள், உயரம் குறைந்... மேலும் பார்க்க

10, பிளஸ் 2 தோ்வுகளில் கஸ்தம்பாடி பிங்க் பப்ளிக் பள்ளி சிறப்பிடம்

ஆரணியை அடுத்த கஸ்தம்பாடி பிங்க்ஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றனா். இந்தப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வெழுதிய அனைத்து ... மேலும் பார்க்க

பேருந்து நிலையப் பகுதியில் எரியாத உயா் மின்கோபுர விளக்குகள்

செங்கம் புதிய பேருந்து நிலையப் பகுதியில் பழுதடைந்து எரியாமல் உள்ள உயா் மின்கோபுர விளக்குகளால் பயணிகள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். செங்கத்தில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஓட்டியுள்ளது ... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் மே 16-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலையில் வருகிற மே 16-ஆம் தேதி தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா்துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபு... மேலும் பார்க்க

திமுகவினா் பொதுமக்களுக்கு நீா் மோா் வழங்கல்

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் 20-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை திமுகவினா் பொதுமக்களுக்கு நீா் மோா் வழங்கினா். போளூா் தீயணைப்பு நிலையம் அருகே திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சாா்பில், பொதுமக்களின் தாகம... மேலும் பார்க்க