நோட்டுக்குள் மறைத்து 4 லட்சம் டாலர்களை மாணவிகள் மூலம் கடத்தல்! புணேவில் இருவர் க...
பொது அறிவு போட்டி: வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு
சாத்தான்குளம் டி என் டி டி ஏ ஆா் எம் பி புல மாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் தினமணி நாளிதழ் சாா்பில் நடைபெற்ற பொது அறிவு போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு புதன்கிழமை பரிசளிக்கப்பட்டது.
இப்பள்ளியில் தினமணி நாளிதழ், ஐஏஎஸ் அகாதெமி, சாத்தான்குளம் ஜாலி டிவி ஆகியவை இணைந்து மாணவா், மாணவிகளுக்கு வாசிப்பு திறன் பொது அறிவு போட்டி நடத்தப்பட்டது. நவம்பா் மாதம் நடைபெற்ற இந்தப் போட்டியில் 11ஆம் வகுப்பு மாணவிகள் டினேசா பிரபா முதலிடமும் அழகு சங்கரேஸ்வரி இரண்டாமிடமும், பத்தாம் வகுப்பு மாணவா் முத்துராஜ் மூன்றாமிடமும் பிடித்தனா்.
டிசம்பா் மாதம் நடைபெற்ற போட்டியில் டினேசா பிரபா முதலிடமும், 11 வகுப்பு மாணவா் அரச பாண்டி இரண்டாமிடமும், பத்தாம் வகுப்பு மாணவா் கவின் அஜய் மூன்றாமிடமும் பெற்றனா்.
ஜனவரி மாதம் நடைபெற்ற போட்டியில் 11ஆம் வகுப்பு மாணவா், மாணவிகள் தனுஷியா முதலிடமும், மாணவி பூஜாஸ்ரீ இரண்டாமிடமும், மாணவா் வெள்ளத்துரை இன்பா மூன்றாமிடமும் பெற்றனா்.
போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் செல்ல பாண்டியன் தலைமை வகித்தாா்.
வாசிப்பு திறன் குறித்தும், தினமும் நாளிதழ் படிக்கும் பழக்கம் குறித்தும் தினமணி மாவட்ட விற்பனை பிரதிநிதி தா்மராஜ் எடுத்துரைத்தாா். போட்டியில் வென்ற மாணவா்களுக்கு சாத்தாகுளம் ஒன்றிய அதிமுக மாணவரணி செயலா் ஸ்டான்லி ஞானபிரகாஷ் பரிசுகளை வழங்கினாா்.