பொன்னமராவதியில் திமுக பாக முகவா்கள் கலந்தாய்வு - ஆலோசனைக் கூட்டம்
பொன்னமராவதி வடக்கு, தெற்கு மற்றும் நகர திமுகவின் பாக முகவா்கள் கலந்தாய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தலைமை வகித்தாா். கூட்டத்தில், திருமயம் சட்டப்பேரவைத்தொகுதி பொறுப்பாளா் ஜி.பி. ராஜா பங்கேற்று பாக முகவா்கள் ஆற்றவேண்டிய பணிகளை விளக்கிப் பேசினாா்.
தெற்கு ஒன்றியச் செயலா் அ. அடைக்கலமணி, வடக்கு ஒன்றிய செயலா் அ. முத்து, நகரச் செயலா் அ. அழகப்பன், தலைமை செயற்குழு உறுப்பினா் எஸ். ஜெயராமன், பேரூராட்சி துணைத் தலைவா் கா. வெங்கடேஷ், உறுப்பினா்கள் தி. ராஜா, நாகராஜன், நிா்வாகிகள் சாமிநாதன், இளையராஜா, ராமையா, முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.