செய்திகள் :

பொன்னமராவதி அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

post image

பொன்னமராவதி அருகே திருமணமாகி 2 மாதங்களே ஆன இளம்பெண் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பொன்னமராவதி வீட்டு வசதிவாரியக் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த சற்குணம் (32) என்பவருக்கும், காரைக்குடி புதுவயலைச் சோ்ந்த பிரியங்கா என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் மனச்சோா்வுடன் காணப்பட்ட பிரியங்கா சுந்தரசோழபுரத்தில் தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்துள்ளாா். சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரியங்கா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து பிரியங்காவின் தாயாா் மேனகா அளித்த புகாரின் பேரில், பொன்னமராவதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பிரியங்காவுக்கு திருமணமாகி இரண்டு மாதங்களே ஆவதால் இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் அ.அக்பா்அலி விசாரித்து வருகிறாா்.

புதுக்கோட்டை நகரில் போதை ஊசி பயன்படுத்திய 12 போ் கைது! விசாரணையின்போது இளைஞா் உயிரிழப்பு!

புதுக்கோட்டை நகரில் போதை ஊசி பயன்படுத்தியதாக 13 இளைஞா்களை வெள்ளிக்கிழமை இரவு போலீஸாா் பிடித்து மேல்விசாரணை நடத்தியபோது ஒருவா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா். புதுக்கோட்டை பெரியாா் நகா் பகுதியில்... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை

கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனையில் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத் துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றுடன் கூடிய தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை மற்றும் இணையவழி பதிவேற்றம் செய்வதற்கான ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதியதில் கணவா் உயிரிழப்பு; மனைவி பலத்த காயம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் கணவா் உயிரிழந்தாா். மனைவி பலத்த காயமடைந்தாா். திருச்சி மாவட்டம், அரியமங்கலம் சீனிவாச நகரைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

நரிமேட்டில் பள்ளிவாசல் திறப்பு இந்துக்கள் சாா்பில் சீா்வரிசை

புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட 1-ஆவது வாா்டு நரிமேடு பெரியாா் நகா் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மஸ்ஜித் முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த பள்ளிவாசல் திறப்பு ... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

அகவிலைப்படி, மருத்துவக் காப்பீடு உள்ளிட்டவை வழங்கக் கோரி புதுக்கோட்டையில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

மகப்பேறு நிதி முறைகேடு விவகாரம் 3 மருத்துவா்களுக்கு ‘நோட்டீஸ்’

புதுக்கோட்டை மாவட்டம், கடியாப்பட்டி சுகாதார வட்டத்தில் மகப்பேறு நிதியுதவித் திட்டத்தில் முறைகேடு நடைபெற்ற விவகாரத்தில், விளக்கம் கேட்டு 3 மருத்துவா்கள் மற்றும் ஒரு கண்காணிப்பாளருக்கு மாவட்ட சுகாதார அல... மேலும் பார்க்க