செய்திகள் :

பொய் வழக்குப் போடும் போலீஸார் மீது வழக்குத் தொடர அரசு அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

post image

நாட்டில் தனிப்பட்ட காரணங்களுக்காக தனிநபர்களுக்கு எதிராக பொய் வழக்குப் பதிவு செய்து, போலியான ஆதாரங்களை தயாரிக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அரசு அனுமதி தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதாவது, ஒரு தனிநபருக்கு எதிராக பொய் வழக்குப் பதிவு செய்யும் காவல்துறை அதிகாரி, ஒருபோதும் தனது அலுவலகப் பணி என்ற போர்வையில், அவர் மீது தொடரப்படம் வழக்கிலிருந்து விலக்கு கோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறது.

ஏனென்றால் ஒரு தனிநபர் மீது போலியாக வழக்குப் பதிவு செய்வதும், அது தொடர்பாக போலியான ஆதாரம் அல்லது ஆவணங்களைத் தயாரிப்பதும் ஒரு பொதுதுறையில் பணியாற்றும் அதிகாரியின் அலுவலகப் பணியின் ஒரு பகுதியாக இருக்கவே முடியாது என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜேபி பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த வழக்கில், அரசியலமைப்புச் சட்டம் 197வது பிரிவானது, தங்களது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் காவல் அதிகாரிகளைப் பாதுகாக்க ஒருபோதும் பயன்படாது என்றும் தெரிவித்துள்ளனர்.

அரசுத் துறையில் பணியாற்றும் அதிகாரிகள், தங்களது கடமையின்போது இழைக்கும் ஏதேனும் தவறுகளுக்காக அவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் பொதுத் துறை ஊழியர்களுக்காக கொண்டுவரப்பட்டதே அரசியலமைப்புச் சட்டம் 197 ஆகும். இந்த சட்டப்படி, இதுபோன்ற அரசு ஊழியர்கள் மீது சட்ட ரீதியாக வழக்குத் தொடர அரசு அனுமதி பெற வேண்டியது கட்டாயமாகும்.

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சூடு: தீவிரவாதி பலி

மணிப்பூரின் தௌபாலில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சண்டையில் தீவிரவாதி என சந்தேகிக்கப்படுபவர் கொல்லப்பட்டார். இதுகுறித்து போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஒரு ரகசிய தகவலின் பேரில... மேலும் பார்க்க

அதிகாரத்தை அனுபவிப்பதைத் தவிர ராகுல் காந்தி குடும்பம் எதையும் செய்யவில்லை: சிராக் பஸ்வான்

காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க் கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் விமர்சித்துள்ளார். மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் இன்று செய்தியாளர்களுடன் பேசுகையில், "சுதந்திரத்த... மேலும் பார்க்க

பெங்களூரு மெட்ரோ ரயிலில் பிச்சை எடுக்கும் நபரின் விடியோ வைரல்

பெங்களூரு மெட்ரோ ரயிலில் பிச்சை எடுக்கும் நபரின் விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த விடியோவில், கர்நாடக மாநிலம், பெங்களூரு ரயிலுக்குள் மாற்றுத்திறனாளி ஒருவர் பயணியிடம் பிச்சை எடுக்கிறார். பின... மேலும் பார்க்க

காங்கிரஸ் மீது பிரதமர் மோடி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

அரசமைப்பு சாசனம் குறித்த விவாதத்தில் மக்களவையில் எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி பதிலுரை ஆற்றினார்.மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்ததாவது, ``நமது அரசியல் சாசனம் நம்மை 75 ஆண்டுகளாக முன்னேற்றப் பாதையி... மேலும் பார்க்க

போராட்டத்தில் ஈடுபட்டால் மட்டுமே முறையான விசாரணை? சிபிஐ மீது விமர்சனம்

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.இந்த நிலையில... மேலும் பார்க்க

பிகாரில் இணைப்பு உடைந்ததால் இரண்டாக பிரிந்த சரக்கு ரயில்

பிகாரில் இணைப்பு உடைந்ததால் சரக்கு ரயில் இரண்டாக பிரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகார் மாநிலம், பாகல்பூர்-ஜமால்பூரில் உள்ள கரியா-பிப்ரா ஹால்ட் அருகே சரக்கு ரயிலில் இணைந்து உடைந்ததால் ரயில... மேலும் பார்க்க