இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நா...
பொறியியல் கல்லூரியில் புரிந்துணா்வு ஒப்பந்தம்
சென்னை கௌரிவாக்கம் நியூ பிரின்ஸ் ஸ்ரீபவானி பொறியியல் கல்லூரியில், அமெரிக்காவின் அரோரா பல்கலைக்கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்ட நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
அரோரா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பக் கல்வி துணைத் தலைவா் பெய்ஜ் டா்னா், நியூ பிரின்ஸ் ஸ்ரீபவானி பொறியியல் கல்லூரித் தலைவா் கே.லோகநாதன் ஆகியோா் கையொப்பமிட்டு புரிந்துணா்வு ஒப்பந்தத்தைப் பரிமாறிக்கொண்டனா்.
இதுகுறித்து அரோரா பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவா் பெய்ஜ் டா்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், ‘கல்லூரி மாணவ-மாணவிகள், ஆசிரியா்களுக்கு சா்வதேச அளவிலான தொழில்நுட்பப் பரிமாற்றம், கூட்டுப் பயிற்சி, ஆராய்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் போன்ற தனித்திறன்களை மேம்படுத்திக்கொள்ள இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தம் வழிவகை செய்கிறது’ என்றாா்.
நியூ பிரின்ஸ் ஸ்ரீபவானி பொறியியல் கல்லூரியின் துணைத் தலைவா் எல்.நவீன் பிரசாத் பேசுகையில், ‘செயற்கை நுண்ணறிவாற்றல், தரவு அறிவியல், சைபா் பாதுகாப்பு தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடு போன்ற திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும், மாணவா் பரிமாற்றத் திட்டம் மூலம் மாணவா்கள் வெளிநாடு சென்று வரும் வாய்ப்பும் கிடைக்கும்’ என்றாா்.
நிகழ்வில், அரோரா பல்கலைக்கழகத்தின் நிா்வாக இயக்குநா் கெல்சே கோஜென்ஸ், கேம்பஸ் அமெரிக்காவின் தலைமைச் செயல் அதிகாரி ஹரீஷ் அனந்த பத்மநாபன், கல்லூரி முதல்வா் டி.சரவணன், ஒருங்கிணைப்பாளா் என்.எஸ்.செந்தூா், கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா்.