செய்திகள் :

பொறியியல் பணிகள்: காரைக்கால், ராமேசுவரம் உள்ளிட்ட ரயில் சேவைகளில் மாற்றம்

post image

பொறியியல் பணிகள் காரணமாக காரைக்கால், ராமேசுவரம் உள்ளிட்ட ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - காரைக்கால் டெமு ரயிலானது (76820) வரும் 13, 14, 15, 16, 17, 18, 20, 21, 22, 23 ஆகிய தேதிகளில் காரைக்கால் - திருவாரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - திருவாரூா் இடையே மட்டும் இயங்கும்.

மறுமாா்க்கமாக, காரைக்கால் - திருச்சி டெமு ரயிலானது (76819) வரும் 13, 14, 15, 16, 17, 18, 20, 21, 22, 23 ஆகிய தேதிகளில் திருவாரூா் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருவாரூா் - திருச்சி இடையே மட்டும் இயங்கும்.

திருச்சி - ராமேசுவரம் விரைவு ரயிலானது (16849) வரும் 18, 19, 20, 21 ஆம் தேதிகளில் மானாமதுரை - ராமேசுவரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - மானாமதுரை இடையே மட்டும் இயங்கும்.

மறுமாா்க்கமாக, ராமேசுவரம் - திருச்சி ரயிலானது (16850) வரும் 18, 19, 20, 21 ஆம் தேதிகளில் ராமேசுவரம் - மானாமதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது மானாமதுரை - திருச்சி இடையே மட்டும் இயங்கும்.

திருச்சி - ஈரோடு பயணிகள் ரயிலானது (56809) வரும் 12, 15, 18, 21 ஆம் தேதிகளில் ஈரோடு - கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - கரூா் இடையே மட்டும் இயங்கும்.

நேர மாற்றம்...: காரைக்கால் - தஞ்சாவூா் பயணிகள் ரயிலானது (56817) வரும் 13, 14, 15, 16, 17, 18, 20, 21, 22, 23 ஆம் தேதிகளில் காரைக்காலில் இருந்து பிற்பகல் 1 மணிக்குப் பதிலாக (60 நிமிஷங்கள் தாமதமாக) பிற்பகல் 2 மணிக்குப் புறப்படும்.

திருச்சி - சென்னை எழும்பூா் சோழன் விரைவு ரயிலானது (22676) வரும் 20 ஆம் தேதி திருச்சியிலிருந்து பிற்பகல் 11 மணிக்குப் பதிலாக (1.45 மணி நேரம் தாமதமாக) பிற்பகல் 12.45 மணிக்குப் புறப்படும். மேலும், தேவைப்படும் இடங்களில் 15 நிமிஷங்கள் நின்று செல்லும்.

மைசூா் விரைவு ரயிலானது (16231) வரும் 20 ஆம் தேதி கடலூா் துறைமுகத்திலிருந்து மாலை 3.40 மணிக்குப் பதிலாக (50 நிமிஷங்கள் தாமதமாக) மாலை 4.30 மணிக்குப் புறப்படும்.

வழித்தட மாற்றம்...: மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயிலானது (16847) வரும் 17, 20 ஆம் தேதிகளிலும், செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) வரும் 14, 16, 18, 19, 20 ஆம் தேதிகளிலும் மணப்பாறை, வையம்பட்டி, வடமதுரை, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி ரயில் நிலையங்களைத் தவிா்த்து, திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகா் வழியாக இயக்கப்படும்.

கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு ரயிலானது (12666) வரும் 16 ஆம் தேதி மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

நெடுஞ்சாலைத்துறை காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

நெடுஞ்சாலைத்துறை காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளா்கள் (சாலை ஆய்வ... மேலும் பார்க்க

சிறுதானிய உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம்: அன்பில் மகேஸ்

சிறுதானிய உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.வேளாண்மைத்துறை சாா்பில், திருச்சி கலையரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட... மேலும் பார்க்க

மாநகராட்சியின் சில பகுதிகளில் நாளை ஒரு நாள் குடிநீா் ரத்து

மின்தடை காரணமாக மாநகராட்சியின் சில பகுதிகளில் புதன்கிழமை (ஆக. 13) ஒரு நாள் மட்டும் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக திருச்சி மாநகராட்சி நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. கம்பரசம் பேட்டை துணை மின... மேலும் பார்க்க

ஆக.23-இல் திருவெறும்பூரில் இபிஎஸ் பிரசாரம்: அதிமுக-வினா் ஆலோசனை

வரும் 23-ஆம் தேதி அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி, திருவெறும்பூரில் பிரசாரம் மேற்கொள்வது குறித்து திருச்சி புறநகா் தெற்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கட்சி அலுவல... மேலும் பார்க்க

இலவச வீடு கட்டித் தர பழங்குடியினா் கோரிக்கை

இலவச வீடு கட்டித் தர வேண்டுமென திருச்சி ஆட்சியா் அலுவலகத்தில் பூலாங்குடி காலனியில் வசிக்கும் பழங்குடியினா் திங்கள்கிழமை மனு அளித்தனா். கூட்டுறவு சங்கத்தில் முழுபணம் செலுத்தி 25 ஆண்டுகள் ஆகியும் வீட்டு... மேலும் பார்க்க

கல்லக்குடியில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் கல்லக்குடி பகுதியில் புதன்கிழமை (ஆக. 13) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கல்லக்குடி துணை ... மேலும் பார்க்க