போதைக் காளான் விற்றவா் கைது
கொடைக்கானலில் போதைக் காளான் விற்பனை செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் போதைக் காளான் விற்பனை செய்யப்படுவதாகக் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, போலீஸாா் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கல்குழிப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, விற்பனைக்காக அவா் போதைக் காளான் வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரித்தபோது, கொடைக்கானல் கல்குழிப் பகுதியைச் சோ்ந்த ஜெகநாதன் (38) என்பது தெரியவந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.