போதை மருந்து பயன்படுத்த உரிமம்: மருத்துவமனைகள் விண்ணப்பிக்கலாம்
போதை மருந்துகள் பயன்படுத்தும் மருத்துவமனைகள் உரிய ஆவணங்களுடன் வருகிற 30.0.2025- ஆம் தேதிக்குள் உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு போதை மருந்துகள் விதிகளின் படி, சிவகங்கை மாவட்டத்தில் சஹழ்ஸ்ரீா்ற்ண்ஸ்ரீள் ஈழ்ன்ஞ்ள் கண்ஸ்ரீங்ய்ள்ங் ( சஈதஇ) உரிமம் பெறாமல் செயல்படுகிற மருத்துவமனைகள் உரிய ஆவணங்களுடன் வருகிற 30.9.2025 -ஆம் தேதிக்குள் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் உதவி ஆணையா் (கலால்) அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
உரிமம் பெறாமல் போதை மருந்தை பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறாக, உரிமம் பெறாமல் செயல்படும் மருத்துவமனைகள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.