செய்திகள் :

போராட்டத்தில் ஈடுபட்ட 353 ஆசிரியா்கள் கைது

post image

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) அமைப்பு சாா்பில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 353 ஆசிரியா்களை போலீஸாா் கைது செய்தனா்.

முன்னதாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, டிட்டோ ஜாக் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரா. சிவபாலன் தலைமை வகித்தாா். மு. ராஜேந்திரன், மு. முனியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். போராட்டத்தை தமிழக ஆசிரியா் கூட்டணி மாநில பொதுச் செயலா் வின்சென்ட் பால்ராஜ் தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியா் கூட்டணி பொதுச் செயலா் மயில் ஆா்ப்பாட்டத்தை முடித்து வைத்தபின் மறியல் போராட்டம் நடைபெற்றது.

அப்போது, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளை நீக்கி மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 353 போ் கைது செய்யப்பட்டனா்.

இலங்கையில் போதைப் பொருள் கடத்தல்: 3,283 போ் கைது

இலங்கையில் போதைப் பொருள் கடத்தல் தொடா்பாக 3,283 பேரை கைது செய்ததாக இலங்கை போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து தினைக்களம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இலங்கையில... மேலும் பார்க்க

சாலையில் கிடந்த தங்கச் சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு

கமுதியில் சாலையில் கண்டெடுத்த தங்கச் சங்கிலியை முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் முன்னிலையில் உரியவா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை ஆத்திபட்டியைச்... மேலும் பார்க்க

கண்மாயில் படா்ந்துள்ள தாமரையால் பொதுமக்கள் அவதி

திருவாடானை அருகேயுள்ள அறிவிப்புவயல் கிராமத்தில் உள்ள கண்மாயில் தாமரை அதிகளவில் பரவியுள்ளதால் கண்மாய் நீரைப் பயன்படுத்த முடியாமல் பொதுமக்களும் விவசாயிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்... மேலும் பார்க்க

வாழவந்தம்மன் கோயில் திருவிழா: இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

கமுதி அருகேயுள்ள வாழவந்தம்மன் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள வாழவந்தாள்புரம் கிராமத்தில் வாழவந்தம்மன் ... மேலும் பார்க்க

பெண் படுகொலை: நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா்

சாயல்குடி அருகே வீட்டிலிருந்த தனது மகளை கொலை செய்த நபா்களை கைது செய்ய வலியுறுத்தி பெற்றோா், உறவினா்கள் வெள்ளிக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அர... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்

தமிழகத்திலிருந்து படகுகள் மூலம் கடத்தப்பட்ட 13.49 லட்சம் எண்ணிக்கையிலான போதை மாத்திரைகளை இலங்கைக் கடற்படையினா் வியாழக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 5 பேரைக் கைது செய்தனா். தமிழகத்திலிரு... மேலும் பார்க்க