செய்திகள் :

மகன் இறப்பு.. 34 ஆண்டுகளுக்குப் பின் எம்எல்ஏ.. ஈவிகேஎஸ் இளங்கோவன்!

post image

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 75. அவரது இறுதிச் சடங்குகள் சென்னையில் நாளை நடைபெறவிருக்கிறது.

சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலையில் இன்று காலை பின்னடைவு ஏற்பட்டது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி காலமானார்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈவெரா(46) கடந்த ஆண்டு மாரடைப்பால் காலமானார். மகனின் இறப்பால் மிகுந்த துயரமடைந்திருந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

கடந்த 2021ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் முதல் முறையாக களமிறங்கிய திருமகன் ஈவெரா, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினரான நிலையில், அவரது மரணம் குடும்பத்தினரையும் உலுக்கியிருந்தது.

அதனைத் தொடர்ந்து, அவரது வெற்றிடத்தை நிரப்ப, ஈவிகேஎஸ் இளங்கோவன், மகன் திருமகன் வகித்து வந்த ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவைக்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 34 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

இதையும் படிக்க.. சென்னையில் நாளை ஈவிகேஎஸ் இளங்கோவன் இறுதிச்சடங்கு

34 ஆண்டுகளுக்குப் பின்.. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தொகுதியில் 1984ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன், தமிழக சட்டப்பேரவைக்குள் முதல் முறையாக நுழைந்து அரசியல் வாழ்வை வெற்றியோடு தொடங்கினார். பிறகு 1989ஆம் ஆண்டு பவானிசாகர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு அதிமுக உறுப்பினரிடம் தோல்வியடைந்த பிறகு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை.

காங்கிரஸ் கட்சியில் முன்னிலை வகித்து வந்த அவர் தொடர்ந்து மத்திய அமைச்சர், காங்கிரஸ் மாநில தலைவர் என பல உயர் பதவிகளையும் பொறுப்புகளையும் வகித்து கட்சியில் முக்கிய தலைவராகவும் அரசியலில் தனக்கென ஒரு இடத்தையும் உருவாக்கி வைத்திருந்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்து முறை போட்டியிட்டு ஒரு முறை வெற்றி பெற்று எம்.பி.யாக இருந்தவர்.

அதன்பிறகு, சுமார் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மகனின் மறைவால், சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு, அரசியல் வாழ்வைத் தொடங்கிய அதே புள்ளியில் அதாவது எம்எல்ஏவாகி, சட்டப்பேரவைக்குள் நுழைந்திருந்த நிலையில்தான், உடல்நலக் குறைவால் காலமானார்.

கோடியக்கரையில் உள்வாங்கிய கடல்!

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கடல் சனிக்கிழமை மாலை திடீரென உள்வாங்கி குளம்போல் அமைதியாகக் காணப்பட்டது. வங்கக் கடலில் கடந்த வாரத்தில் இலங்கைக்கு அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி க... மேலும் பார்க்க

விஜயகாந்த் போல எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர் ஈவிகேஸ் இளங்கோவன்: பிரேமலதா

விஜயகாந்த் போல எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர் ஈவிகேஸ் இளங்கோவன் என்று தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த தேமுதி... மேலும் பார்க்க

சேதுபாவாசத்திரத்தில் மழை நீர் வடிகால் வாய்க்காலில் மூழ்கி குழந்தை பலி

சேதுபாவாசத்திரத்தில் வீட்டு வாசலில் சென்ற மழைநீர் வடிகால் வாய்க்கால் நீரில் மூழ்கி குழந்தை பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேதுபாவாசத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வசிப்பவர் மீனவர் வினோத்... மேலும் பார்க்க

கனமழை: தூத்துக்குடியிலிருந்து புறப்படும் ரயில் சேவைகளில் மாற்றம்!

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தண்டவாளப் பாதைகளில் மழைநீர் அதிகளவில் தேங்கியிருப்பதல் அங்கிருந்து இன்று புறப்படும் முக்கிய ரயில்கள் மீளவிட்டான் ரயில் நிலையத்திருந்து புறப்படுமென்று ரயில்வே நிர்வாகம் த... மேலும் பார்க்க

அம்பேத்கர் புகழை பாடிக்கொண்டே அரசமைப்பின் ஆன்மாவை தகர்ப்பதா? திருமாவளவன் பேச்சு

புது தில்லி: புரட்சியாளர் அம்பேத்கர் புகழை பாடிக்கொண்டே, அவர் உருவாக்கிய அரசமைப்பின் ஆன்மாவை தகர்க்கும் வேலையில் மத்திய அரசு ஈடுபடுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மக்களவையில்... மேலும் பார்க்க

கோவை மருதமலையில் நடிகை திரிஷா சாமி தரிசனம்

கோவை மருதமலையில் நடிகை திரிஷா சாமி தரிசனம் செய்தார்.நடிகர் சூர்யாவின் 45வது திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 27 ஆம் தேதி மாசாணியம்மன் கோயிலில் பூஜையுடன் தொடங்கியது. தற்போது படபிடிப்பானது கோவை வேளாண் ... மேலும் பார்க்க