வயநாடு இடைத்தேர்தல்: ராகுலை விஞ்சிய பிரியங்கா காந்தி! | செய்திகள்: சில வரிகளில் ...
மகப்பேறு நிதி முறைகேடு விவகாரம் 3 மருத்துவா்களுக்கு ‘நோட்டீஸ்’
புதுக்கோட்டை மாவட்டம், கடியாப்பட்டி சுகாதார வட்டத்தில் மகப்பேறு நிதியுதவித் திட்டத்தில் முறைகேடு நடைபெற்ற விவகாரத்தில், விளக்கம் கேட்டு 3 மருத்துவா்கள் மற்றும் ஒரு கண்காணிப்பாளருக்கு மாவட்ட சுகாதார அலுவலா் எஸ். ராம்கணேஷ் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.
கடியாப்பட்டி சுகாதார வட்டத்தில் தமிழ்நாடு அரசின் மகப்பேறு நிதியுதவித் திட்டத்தில் போலிப் பயனாளிகள் பட்டியல் தயாரித்து ரூ. 18.60 லட்சம் முறைகேடு செய்யப்பட்டது தணிக்கையில் தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, இளநிலை உதவியாளா் வெங்கடேஷ் குமாா், வட்டாரக் கணக்கு உதவியாளா் வருண் ஆகியோா் மீது காவல்துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. வெங்கடேஷ்குமாா் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா். வருண் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
இதன் தொடா்ச்சியாக, தொடா்புடைய சுகாதார வட்டத்தில் முறைகேடு நடைபெற்ற காலங்களில் மருத்துவ அலுவலா்களாக பணியில் இருந்த மருத்துவா்கள் பழனிவேல்ராஜன், ஸ்ரீதா், ரகுவரன் மற்றும் கண்காணிப்பாளா் சுந்தராஜன் ஆகிய 4 பேரிடம் விளக்கம் கேட்டு மாவட்ட சுகாதார அலுவலா் எஸ். ராம்கணேஷ் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.