செய்திகள் :

மகாராஷ்டிரத்தில் இமாலய வெற்றி பெற்ற மகாயுதி கூட்டணி!

post image

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணி 235 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

ஜாா்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக கடந்த நவம்பா் 13, 20 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மொத்தம் 67.74 சதவீத வாக்குகள் பதிவாகின.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த நவம்பா் 20 அன்று நடைபெற்றது.  மொத்தம் 9.70 கோடி போ் வாக்களிக்க தகுதிபெற்ற இத்தோ்தலில் 66.05 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 1995, பேரவைத் தோ்தலுக்கு பிறகு அதிகபட்ச வாக்குப்பதிவு இதுவாகும்.

வாக்கு எண்ணிக்கை இன்று (நவ. 23) காலை தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதையும் படிக்க | ஜார்க்கண்ட்டை கைப்பற்றியது இந்தியா கூட்டணி! 56 இடங்களில் வெற்றி

மகாயுதி கூட்டணி இமாலய வெற்றி

மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் மகாயுதி கூட்டணி சார்பில் ஆளும் சிவசேனை கட்சி 81 இடங்களிலும், பாஜக 144 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்) 59 இடங்களிலும் போட்டியிட்டனர்.

இதில், பாஜக மட்டுமே 133 இடங்களில் வெற்றிபெற்று, மாநிலத்தின் தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியாக உருவெடுத்துள்ளது. சிவசேனை 57 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்) 41 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்துவந்த மஹாயுத்தி கூட்டணி கட்சிகள் மொத்தமாக 235 தொகுதிகளில் வெற்றி பெற்று இமாலய வெற்றியைப் பதிவு செய்துள்ளனர்.

‘மகாயுதி’ கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான நிலை உருவாகியுள்ளதை அடுத்து கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

மகா விகாஸ் அகாடி கூட்டணி மாபெரும் தோல்வி

காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 49 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதில், காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார்) 10 இடங்களிலும், சிவசேனை (யுபிடி) 20 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்தத் தேர்தல் முடிவுகள் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாக சிவசேனை (யுபிடி) கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை. அதுபற்றி விரிவாக ஆராய்வோம்” என கூறியுள்ளார்.

கூட்டணிகள் வெற்றிபெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை:

மகாயுதி கூட்டணி

பாஜக - 132

தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்) - 41

சிவசேனை - 57

ஜன சுராஜ்ய சக்தி - 2

ராஷ்டிரிய சமாஜ் பக்‌ஷா - 1

ராஷ்டிரிய யுவ சுவபிமான் கட்சி - 1

ராஜர்ஷி ஷாகு விகாஸ் அகாதி - 1

இதையும் படிக்க | 14 மாநிலங்களின் இடைத்தேர்தல் வெற்றி நிலவரம்!

மகா விகாஸ் அகாடி கூட்டணி

காங்கிரஸ் - 16

சிவசேனை (யுபிடி) - 20

தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார்) - 10

சமாஜ்வாதி கட்சி - 2

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 1

இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி - 1

மற்ற கட்சிகள்

அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் - 1

சுயேட்சை வேட்பாளர்கள் - 2

மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணி; ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி ஆட்சி!! முழு விவரம்

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலில் ஆளும் பாஜக தலைமையிலான ‘மகாயுதி’ கூட்டணி அமோக வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. மொத்தம் 288 தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில் பாஜக கூட்டணிக்கு 230 இடங்கள் கி... மேலும் பார்க்க

அரசு முறைப் பயணமாக இந்தியா வருகிறாா் பிரிட்டன் மன்னா்

பிரிட்டன் மன்னா் மூன்றாம் சாா்லஸ், அவரது மனைவி கமிலா அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு அடுத்த ஆண்டு வரவுள்ளனா். நடப்பாண்டு தொடக்கத்தில் பிரிட்டன் மன்னருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறிடப்பட்டு சிகிச்சை ... மேலும் பார்க்க

மும்பை தமிழா்களின் ‘கேப்டன்’ ஹாட்ரிக் வெற்றி!

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் வசிக்கும் தமிழா்களால் ‘கேப்டன்’ என்றழைக்கப்படும் ஆா்.தமிழ்செல்வன், பாஜக சாா்பில் சியோன்-கோலிவாடா தொகுதியில் தொடா்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளாா். தமிழகத்தின் ... மேலும் பார்க்க

பிரதமா் மீதான மக்களின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி: யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேச இடைத்தோ்தலில் ஆளும் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ‘இது பிரதமா் நரேந்திர மோடி மீதான மக்களின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி’ என்று முதல்வா் யோகி ஆதித்யநாத் கருத்து ... மேலும் பார்க்க

ஜாா்க்கண்ட் முதல்வா் குடும்பத்தில் மூவா் வெற்றி

ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) தலைவரும் அந்த மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன், அவரது மனைவி கல்பனா சோரன் மற்றும் ஹேமந்த் சோரனின் சகோதரா் வசந்த் சோரன் ஆகிய மூவரும் அமோக வெற்றியை பதிவு செய்துள்ளனா... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் சுமுகமாக புதிய ஆட்சி: முதல்வா் ஷிண்டே

மகாராஷ்டிரத்தில் புதிய ஆட்சி மிகவும் சுமுகமாக அமையும் என்று முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தாா். துணை முதல்வா்களான பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸ், தேசியவாத காங்கிரஸின் அஜீத் பவாா் ஆகியோரும் இதே கருத்தை... மேலும் பார்க்க