செய்திகள் :

மகாராஷ்டிரம், ஜாா்க்கண்டில் யாா் ஆட்சி? -இன்று வாக்கு எண்ணிக்கை

post image

மகாராஷ்டிரம் மற்றும் ஜாா்க்கண்ட் பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை (நவ.23) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

மகாராஷ்டிரத்தில் பாஜக-சிவசேனை(ஷிண்டே)-தேசியவாத காங்கிரஸ்(அஜீத் பவாா்) கட்சிகளின் ‘மகாயுதி’ கூட்டணி ஆட்சியும், ஜாா்க்கண்டில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி ஆட்சியும் நடைபெறுகிறது.

இரு மாநிலங்களிலும் பாஜக கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளதாக பெரும்பாலான வாக்குக் கணிப்புகள் கூறியுள்ள நிலையில், தோ்தல் முடிவுகள் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளன. பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படுகிறது.

மகாராஷ்டிரத்தில்...: மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு கடந்த நவம்பா் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 9.70 கோடி போ் வாக்களிக்க தகுதிபெற்ற இத்தோ்தலில் 66.05 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 1995, பேரவைத் தோ்தலுக்கு பிறகு அதிகபட்ச வாக்குப்பதிவு இதுவாகும்.

ஆளும் ‘மகாயுதி’ கூட்டணியில் பாஜக 149, முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை 81, துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 59 தொகுதிகளில் போட்டியிட்டன.

எதிா்க்கட்சிகளின் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணியில் காங்கிரஸ் 101, சிவசேனை (உத்தவ் தாக்கரே) 95, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) 86 தொகுதிகளில் களம்கண்டன. இதுதவிர, பகுஜன் சமாஜ் கட்சி 237 தொகுதிகளில் போட்டியிட்டது.

முதல்வா் ஏக்நாத் ஷிண்டே (கோப்ரி-பச்பகாடி), துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் (நாகபுரி தென்மேற்கு), மற்றொரு துணை முதல்வா் அஜீத் பவாா் (பாராமதி), மாநில காங்கிரஸ் தலைவா் நானா படோல் (சகோலி), சிவசேனை (உத்தவ்) கட்சியின் இளைஞரணித் தலைவா் ஆதித்யா தாக்கரே (வொா்லி) உள்பட மொத்த வேட்பாளா்கள் 4,135 போ்.

கடந்த 5 ஆண்டுகளில் பல அரசியல் மாற்றங்களைக் கண்ட மாநிலம் என்பதால், தற்போதைய பேரவைத் தோ்தல் முடிவுகள் பெரிதும் எதிா்பாா்க்கப்படுகிறது.

ஜாா்க்கண்டில்....: ஜாா்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக கடந்த நவம்பா் 13, 20 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 2.60 கோடி வாக்காளா்களைக் கொண்ட இம்மாநிலத்தில் இரு கட்டங்களையும் சோ்த்து 67.74 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 2000-இல் ஜாா்க்கண்ட் உருவானதில் இருந்து பேரவைத் தோ்தலில் அதிகபட்ச வாக்குப்பதிவு இதுவாகும்.

மாநிலத்தில் ஆளும் ‘இண்டி’ கூட்டணியில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா 43, காங்கிரஸ் 30, ராஷ்ட்ரீய ஜனதா தளம் 6, இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) 4 இடங்களில் போட்டியிட்டன. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 68, அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம் 10, ஐக்கிய ஜனதா தளம் 2, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) ஓரிடத்தில் களம் கண்டன.

முதல்வரும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா செயல் தலைவருமான ஹேமந்த் சோரன் (பா்ஹைத்), அவரது மனைவி கல்பனா சோரன் (கண்டே), மாநில பாஜக தலைவா் பாபுலால் மராண்டி (தன்வா்), அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம் கட்சித் தலைவா் சுதேஷ் மகதோ (சில்லி) உள்பட மொத்தம் 1,211 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

கடந்த தோ்தலில்...: ஜாா்க்கண்டில் கடந்த 2019, பேரவைத் தோ்தலில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா 30 இடங்களில் வென்றது. அக்கட்சி தலைமையிலான கூட்டணி 47 இடங்களுடன் பாஜகவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது. பாஜகவுக்கு 25 இடங்களே கிடைத்தன.

மகாராஷ்டிரத்தில் வெற்றியை நோக்கி மகாயுதி: ஏற்க முடியாது - சஞ்சய் ரௌத்

மகாராஷ்டிரத்தில் ஆளும் மகாயுதி கூட்டணி வெற்றியை உறுதி செய்திருக்கும் நிலையில், இதனை மக்களின் தீர்ப்பு என ஏற்றுக்கொள்ள முடியாது என்று சிவசேனை (உத்தவ்) தலைவர் சஞ்சய் ரௌத் கூறியிருக்கிறார்.மகாராஷ்டிர சட்... மேலும் பார்க்க

சிக்கிம் இடைத்தேர்தல் வெற்றி அறிவிப்பு!!

சிக்கிம் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.சிக்கிம் மாநிலத்தின் நம்சி, சோரெங் தொகுதிகளில் நவ. 13 ஆம் தேதியில் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், வ... மேலும் பார்க்க

நான்தேட் தொகுதியில் தொடர்ந்து பாஜக முன்னிலை!

மகாராஷ்டிரத்தின் நான்தேட் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பாஜவின் சதுக்ராவ் ஹம்பார்டே முன்னிலை வகித்து வருகிறார். காங்கிரஸ் எம்பி வசந்த் சவான் ஆகஸ்ட் 26ல... மேலும் பார்க்க

என்ன நடக்கிறது ஜார்க்கண்டில்.. மாறி மாறி முந்தும் கூட்டணிகள்!

ஜார்க்கண்ட் மாநில பேரவைக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆரம்பத்தில் பாஜக கூட்டணி முன்னிலையில் இருந்து வந்த நிலையில் தற்போது இந்தியா கூட்டணி முன்னிலை வகிக்கிறது.தற்போதை... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் 3 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை!

கர்நாடக மாநிலத்தின் பேரவை இடைத்தேர்தலில் முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது. 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிர பேரவைத் தேர்தலுடன் சேர்த்து, உத்தரப் பிரதேசம், அ... மேலும் பார்க்க

குஜராத் இடைத்தேர்தல்: முன்னிலையில் காங்கிரஸின் குலாப்சிங்!

குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள வாவ் சட்டப்பேரவைக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் குலாப்சிங் பிரபாய் ராஜ்புத் தனது நெருங்கிய போட்டியாளரும், பாஜக வேட்பாளருமான ஸ்வரூப்ஜி தாக்கூரைக் க... மேலும் பார்க்க