செய்திகள் :

`மகாராஷ்டிரா வெற்றி பாரத தேசத்தின் கருத்து; 2026... எழுதி வைத்துக் கொள்ளுங்கள்’ - தமிழிசை உற்சாகம்

post image
மகாராஷ்டிரா தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி அமோக முன்னிலையில் இருக்கிறது.

மகாராஷ்ராவில் ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜக கூட்டணி 221 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த வெற்றியை தமிழ்நாடு பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பா.ஜ.க தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். கொண்டாட்டத்தின்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், " இரண்டு மாநிலங்களில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்.

தமிழிசை சௌந்தரராஜன்

இதில் பலம் பொருந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணி பெரும்பான்மையோடு வெற்றி பெற இருக்கிறது என்ற மகிழ்ச்சியை நாங்கள் பகிர்ந்துகொள்கிறோம். மகாராஷ்டிரா என்பது மற்ற மாநிலங்களை விட சற்று வேறுபட்ட மாநிலம். இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும் அங்கே வசிக்கிறார்கள், பணிப்புரிகிறார்கள்.

அதனால் சின்ன பாரத தேசம் என்று மகாராஷ்டிராவை சொல்லலாம். அதனால் மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணிக்கு கிடைத்திருக்கூடிய வெற்றி பாரதிய தேசம் முழுவதும் உள்ள கருத்து என எடுத்துக்கொள்ளலாம். இந்த வெற்றி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி.

தமிழிசை சௌந்தரராஜன்

அதுமட்டுமின்றி பாரத பிரதமரின் திட்டங்களும், மாநில அரசின் திட்டங்களும் இணைந்து இருந்தால் மக்களுக்கு எவ்வளவு பலன் தரும் என்பதை மகாராஷ்டிரா நிரூபித்து மறுபடியும் வெற்றியைப் பெற்றிருக்கிறோம். தற்போது எப்படி மகாராஷ்டிரா வெற்றியைக் கொண்டாடுகிறோமோ... அதேபோல 2026 தமிழ்நாடு தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும். அந்த வெற்றிக் கொண்டாட்டத்தை இதே கமலாலயத்தில் கொண்டாடுவோம் என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

``ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால்... அவரை அருகில் உட்கார வைத்திருந்த நீங்கள் சொங்கியா?" - சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்ததிலிருந்து விமர்சனங்களை எதிர்க்கொண்டார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கட்சி தொடங்கியதால், ரஜினி ரசிகர்களை தன் பக்கம்... மேலும் பார்க்க

Maharashtra: ``தேர்தல் முடிவை ஏற்க முடியாது; ஏதோ சதி நடந்திருக்கிறது” - தாக்கரே கட்சி புகார்

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் எப்போதும் இல்லாத அளவுக்கு வாக்கு சதவீதம் அதிகமாக இருந்தது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டபோது பா.ஜ.க தலைமையிலான மஹாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டு... மேலும் பார்க்க

Maharashtra: கைகொடுத்த பெண்கள் வாக்கு; ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் பாஜக கூட்டணி - முதல்வர் யார்?

மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு கடந்த 20-ம் நடந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இத்தேர்தலில் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை பிரதானப்படுத்தி பா.ஜ.க தலைம... மேலும் பார்க்க

``இங்கிலாந்து வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்" - நெதன்யாகு பிடிவாரண்ட் குறித்து இங்கிலாந்து

கடந்த ஆண்டு முதல் பாலஸ்தீனத்துக்கும் - இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போரில் இதுவரை காஸாவில் மட்டும் பெண்கள், குழந்தைகள் உள்பட 44,000 பேர் உயிரிழந்துள்ளனர். லெபனான் உயிர்ழப்புகள் 3,500-ஐ கடந்துள்ளது... மேலும் பார்க்க

மருத்துவமனை, பள்ளி, நீதிமன்றம்; எங்கேதான் இருக்கிறது உயிர் பாதுகாப்பு? - சாடும் எதிர்க்கட்சிகள்

அதிகரிக்கும் குற்றங்கள்:தமிழகத்தில் பட்டப்பகலில் கொலைகள் நடக்காத நாளே இல்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து திமுக அரசை விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் அரசு மருத்துவமனையில் மருத்துவர் ஒர... மேலும் பார்க்க

சூடுபிடிக்கும் மதுரை டங்ஸ்டன் சுரங்கம் விவகாரம் - ‘டபுள் கேம்’ ஆடுவது தமிழக அரசா, மத்திய அரசா?

புதிய சுரங்கம்!மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை ஒட்டி புதிதாக டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் விட்டு, அதனை ஒரு தனியார் நிறுவனம் ஏலம் எடுத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இந்த செய்திகள் வெளியா... மேலும் பார்க்க