செய்திகள் :

மகாராஷ்டிர மக்களுக்கு நன்றி: ஏக்நாத் ஷிண்டே

post image

மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனை தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிர வாக்காளர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக தலைமையிலான மகா யுதி கூட்டணி, மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பெரும்பான்மை பெறத் தேவையான தொகுதிகளை விடவும் அதிகமான தொகுதிகளில் அதாவது 200 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதன் மூலம், வெற்றி உறுதி செய்யப்பட்டிருப்பதாகவே கூறப்படுகிறது.

இந்த நிலையில், மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனை தலைவருமான ஏக்நாத் ஷிண்டே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

இதையும் படிக்க: வெற்றி உறுதி: மகாராஷ்டிரத்தில் 200 இடங்களில் பாஜக+ முன்னிலை

மகாராஷ்டிர வாக்காளர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது மாபெரும் வெற்றி. மகா யுதி கூட்டணிக்கு அமோக வெற்றிக் கிடைக்கும் என்று முன்பே தெரிவித்து இருந்தேன். அனைத்து சமூக மக்களுக்கும் எனது நன்றி. மகா யுதி கூட்டணி தொண்டர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பேசினார்.

இதனையடுத்து, ஏக்நாத் ஷிண்டே மற்றும் சிவசேனை தலைவர்கள் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.

'நேருவை விடாதீர்கள்...’ கவிஞர் மஜ்ரூஹ் சுல்தான்புரி! கவிதைதான் குற்றம் - 6

இந்தியத் தேர்தல் வரலாற்றிலேயே (சமீப காலத்தில்) முதல் முறையாக - வாக்குப் பதிவு நடந்த மூன்று நாள்களில் - மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று (23/11/2024) அறிவிக்கப்படுகின்றன. உத்தரப் பிர... மேலும் பார்க்க

ஒன்றிணைந்தால் நாம் வெற்றிப் பெறலாம்: அகிலேஷ் யாதவ்

ஒன்றிணைந்தால் நாம் வெற்றிப் பெறலாம் என்று உத்தரப் பிரதேச இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் த... மேலும் பார்க்க

இந்த வெற்றியில் எனது பங்களிப்பு மிகச்சிறியது: தேவேந்திர ஃபட்னவீஸ்

மகாராஷ்டிர பேரவைத் தேர்தல் வெற்றியில் எனது பங்களிப்பு மிகச்சிறியது என்றும், இது எங்கள் அணிக்கு கிடைத்த வெற்றி என்றும் மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிர மாநிலத்தி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தின் அடுத்த முதல்வர் யார்?

மகாராஷ்டிரம் பேரவைத் தோ்தல்களில் 288 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் சனிக்கிழமை (நவ.23) காலை 8 மணிக்கு தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட... மேலும் பார்க்க

கர்நாடக இடைத்தேர்தல்: பசவராஜ் பொம்மை மகன் தோல்வி!

கர்நாடக இடைத்தேர்தலில் ஷிக்காவ்ன் தொகுதியில் போட்டியிட்ட பசவராஜ் பொம்மை மகன் பரத் பொம்மை, அவரை எதிர்த்து போட்டியிட்ட யாசீர் அகமதுகானிடம் 13,448 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.கர்நாடகத்த... மேலும் பார்க்க

2028-ல் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்: கர்நாடக துணை முதல்வர் சிவகுமார்

காங்கிரஸ் தலைவரும், கர்நாடக துணை முதல்வருமான சிவகுமார் 2028-ல் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பெங்களூரில் செய்தியாளர்களுடன் பேசிய துணை முதல்வர் சிவகுமார், இது பாரத் பொம... மேலும் பார்க்க