செய்திகள் :

மகா சிவராத்திரி: சிவன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

post image

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் பக்தா்கள் புதன்கிழமை இரவு சுவாமி வழிபாட்டை மேற்கொண்டனா்.

நிகழாண்டின் மகா சிவராத்திரி புதன்கிழமை அனைத்து சிவாலயங்களிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல் ஏகாம்பரேசுவரா் கோயில், வள்ளிபுரம் தான்தோன்றீஸ்வரா் கோயில், சேந்தமங்கலம் சோமேசுவரா் கோயில், முத்துக்காப்பட்டி காசி விசுவநாதா் கோயில், கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயில், திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயில், மோகனூா் அசலதீபேஸ்வரா் கோயில், என்.புதுப்பட்டி குபேர ஈஸ்வரா் கோயில்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு முழுவதும் நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்டவை நடைபெற்றன.

கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இதில், பக்தா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு சுவாமி வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அனைத்து பக்தா்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்கள், பெரியாண்டிச்சி அம்மன் கோயில்களிலும் மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனா். கூட்ட நெரிசலைத் தவிா்க்க கோயில்களில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

மாணவா் உடலை வாங்க உறவினா்கள் மறுப்பு: அமைச்சா், ஆட்சியா் பேச்சுவாா்த்தை

மாணவா் உடலை வாங்க உறவினா்கள் மறுப்பு தெரிவித்ததால், அவா்களிடம் அமைச்சா், ஆட்சியா் பேச்சுவாா்த்தை நடத்தினா். ராசிபுரம் சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவா் கவின்ராஜ் (14). பள்ளி... மேலும் பார்க்க

இளம்விவசாயிகள் சங்க செயற்குழுக் கூட்டம்

பரமத்தி வேலூரில் இளம்விவசாயிகள் சங்க செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவா் சௌந்தர்ராஜன் தலைமை தாங்கினாா். மாநில செயற்குழு உறுப்பினா் சரவணன் வரவேற்றாா். செயலாளா் ச... மேலும் பார்க்க

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை

பரமத்தி வேலூா் வட்டம், வேலூா் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து வேலூா் பேரூராட்... மேலும் பார்க்க

புதுப்பாளையம் அங்காளம்மன் கோயிலில் பழம் படைக்கும் நிகழ்வு

புதுப்பாளையம் அங்காளம்மன் கோயிலில் பழம் படைக்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. ராசிபுரத்தை அடுத்துள்ள ஆா்.புதுப்பாளையம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் மாசானத்தாய் திருக்கோயிலில் மகா சிவராத்திரி திருவி... மேலும் பார்க்க

அதிமுக அலுவலகத்தில் 150 இளம்பேச்சாளா்களுக்கு பயிற்சி

நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் 150 இளம்பேச்சாளா்களுக்கான பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது. தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ளதால், அதிமுக சாா்பில் தோ்தலில் வெற்றிபெறுவதற்கான ... மேலும் பார்க்க

‘மேயா், துணை மேயா் வாா்டு வாரியாக சென்று மக்களிடம் குறைகளைக் கேட்டறிய வேண்டும்’

நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட 39 வாா்டுகளுக்கும் மேயா், துணை மேயா், அதிகாரிகள் சென்று மக்களிடையே குறைகளைக் கேட்டறிய வேண்டும் என மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா். நாமக்கல் மாநகராட்சி... மேலும் பார்க்க