செய்திகள் :

மகுடி ஊதினால் பாம்பு படமெடுத்து ஆடுமா? உண்மை என்ன? - அறிவியல் சொல்வது இதுதான்!

post image

பாம்பு மகுடி இசைக்கு மயங்கி ஆடும் காட்சியை நாம் பல திரைப்படங்களிலும், நிஜ வாழ்க்கையிலும் பார்த்திருப்போம். ஆனால், பாம்புகளால் உண்மையிலேயே மனிதர்களைப் போல ஒலியைக் கேட்க முடியுமா என்ற கேள்விக்கு அறிவியல் வேறு விதமான பதிலை அளிக்கிறது.

பாம்புகள் ஒலியை எப்படி உணர்கின்றன?

மற்ற விலங்குகளைப் போல பாம்புகளுக்கு வெளிப்புற காது மடல்கள் இல்லை. அவற்றின் கேட்கும் திறன் முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. பாம்புகளின் தாடை எலும்புகள், அவற்றின் உள் காது அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தான் தரையில் ஏற்படும் அதிர்வுகளை பாம்புகளால் உணர முடியும். ஆனால், காற்றில் பரவும் இசை போன்ற ஒலிகளை அவற்றால் கேட்க முடியாது என்கிறது ஆய்வின் முடிவுகள்.

பாம்பு
பாம்பு

மகுடிக்கு பாம்பு மயங்குமா?

2023-ஆம் நடத்தப்பட்ட 'சவுண்ட் கார்டன்:பாம்புகள் வான்வழி மற்றும் தரைவழி ஒலிகளுக்கு எவ்வாறு பதிலளிக்கின்றன' என்ற ஆய்வில், 19 பாம்புகளிடம் சோதனை செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வின் முடிவில், பாம்புகள் காற்றில் பரவும் ஒலிகளை விட, தரையில் ஏற்படும் அதிர்வுகளுக்கே அதன் அசைவுகளை உறுதிப்படுத்தியிருக்கிறது. பின்பு எப்படி மகுடிக்கு பாம்பு ஆடுகிறது என்று கேட்கலாம்.

பாம்புப் பிடிப்பவர் பாம்பு முன் அமர்ந்து, மகுடியை முன்னும் பின்னுமாக வேகமாக அசைக்கும்போது, பாம்பு அந்த அசைவை தனக்கு தீங்கு விளைவிக்க வரும் ஒரு எதிரியின் செயலாகக் கருதுகிறது.

பாம்புகளுக்குக் காதுகள் கேட்காது என்பதால், மகுடியின் இசை அவற்றுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. மாறாக பிடிப்பவரின் உடல் அசைவும் மகுடியின் காட்சியுமே அதன் கவனத்தை ஈர்க்கின்றன.

அச்சுறுத்தல் தீவிரமாகும்போது பாம்புகள் தங்கள் உடலின் மேல் பகுதியிலுள்ள விலா எலும்புகளை விரித்து, கழுத்துப் பகுதியை தட்டையாக மாற்றி `படம்' எடுக்கும்.

இது எதிரியைப் பயமுறுத்தி, பின்வாங்கச் செய்வதற்கான ஒரு முறையாக வைத்துள்ளது. ஆனால் மகுடியை இசைக்கும் போது, நாகப்பாம்பு படம் எடுத்து ஆடுவது, அது இசையை ரசிப்பதாக தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நஞ்சுள்ள பாம்புகள் எவை? பாம்பு கடித்தால் மரணத்தை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? - நிபுணர்கள் விளக்கம்

மழைக்காலத்தில் மக்கள் சந்திக்கும் பல பிரச்சனைகளில் ஒன்று பாம்புகளின் தொல்லை. இருசக்கர வாகனம், கார், குளிர்சாதனப் பெட்டி போன்ற பல இடங்களில் சென்று பதுங்கி இருப்பதாக பல செய்திகளை நாள்தோறும் கேட்க நேரிடு... மேலும் பார்க்க