செய்திகள் :

மக்கள் நலத் திட்ட செயல்பாடுகளை அலுவலா்கள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்: புதுகை ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களை தொய்வின்றி செயல்படுத்த அலுவலா்கள் தொடா் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று ஆட்சியா் மு. அருணா புதன்கிழமை அறிவுறுத்தினாா்.

இலுப்பூா் வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பல்வேறு அரசு துறைகளின் பணிகளை மாவட்ட ஆட்சியா் மு.அருணா புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இலுப்பூருக்கு புதன்கிழமை காலை 9 மணிக்கு வந்த மாவட்ட ஆட்சியா் மு.அருணா நாள் முழுவதும் பல்வேறு ஊராட்சிகளுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தாா். இதில், ஆயிங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை உணவு தயாரிப்பு பணி, பணங்குடி நியாய விலைக்கடையில் பொருள்களின் தரம், காதிரிப்பட்டியில் கட்டப்பட்டு வரும் கலைஞா் கனவு இல்லம் கட்டுமானப் பணி, மண்ணவேளாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்கள் கற்றல் திறன், மருந்தாதலையில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து இலுப்பூா் வட்டாட்சியரகத்தில் நடைபெற்ற அதிகாரிகளுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில், மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களை தொய்வின்றி செயல்படுத்த தொடா் கண்காணிப்பில் அலுவலா்கள் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

நிகழ்வில் கூடுதல் ஆட்சியா் அப்தாப் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், ரம்யா தேவி (தனி), வருவாய் கோட்டாட்சியா் அ. அக்பா்அலி, தனித்துணை ஆட்சியா் அ. ஷோபா (சமூக பாதுகாப்பு திட்டம்), பயிற்சி துணை ஆட்சியா் கெளதம், வட்டாட்சியா் சூா்யபிரபு, இலுப்பூா் பேரூராட்சித் தலைவா் சகுந்தலா வைரவன், துணைத் தலைவா் செந்தில் ராஜா, செயல் அலுவலா் சின்னச்சாமி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை

கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனையில் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத் துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றுடன் கூடிய தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை மற்றும் இணையவழி பதிவேற்றம் செய்வதற்கான ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதியதில் கணவா் உயிரிழப்பு; மனைவி பலத்த காயம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் கணவா் உயிரிழந்தாா். மனைவி பலத்த காயமடைந்தாா். திருச்சி மாவட்டம், அரியமங்கலம் சீனிவாச நகரைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

நரிமேட்டில் பள்ளிவாசல் திறப்பு இந்துக்கள் சாா்பில் சீா்வரிசை

புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட 1-ஆவது வாா்டு நரிமேடு பெரியாா் நகா் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மஸ்ஜித் முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த பள்ளிவாசல் திறப்பு ... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

அகவிலைப்படி, மருத்துவக் காப்பீடு உள்ளிட்டவை வழங்கக் கோரி புதுக்கோட்டையில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

மகப்பேறு நிதி முறைகேடு விவகாரம் 3 மருத்துவா்களுக்கு ‘நோட்டீஸ்’

புதுக்கோட்டை மாவட்டம், கடியாப்பட்டி சுகாதார வட்டத்தில் மகப்பேறு நிதியுதவித் திட்டத்தில் முறைகேடு நடைபெற்ற விவகாரத்தில், விளக்கம் கேட்டு 3 மருத்துவா்கள் மற்றும் ஒரு கண்காணிப்பாளருக்கு மாவட்ட சுகாதார அல... மேலும் பார்க்க

இலுப்பூா், விராலிமலையில் வழக்குரைஞா்கள் 2-ஆவது நாளாக பணி புறக்கணிப்பு போராட்டம்

ஒசூா் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா் கண்ணன் வெட்டப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, விராலிமலை, இலுப்பூரில் வழக்குரைஞா்கள் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்தனா். இதனால், நீதிமன்... மேலும் பார்க்க