செய்திகள் :

மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம்!

post image

இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் திரைத்துறைக்கு வந்தவர் இயக்குநர் மடோன் அஸ்வின். மண்டேலா படத்தின் மூலம் பெரிய கவனம் பெற்றார். அப்படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதையும் வென்றார்.

தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து மாவீரன் திரைப்படத்தை எடுத்தார். இப்படம், விமர்சன ரீதியாகவும் கவனம் பெற்றதுடன் ரூ. 90 கோடி வரை வசூலித்து வெற்றிப்படமானது.

இதையும் படிக்க: காதலிக்க நேரமில்லை: என்னை இழுக்குதடி பாடலின் மேக்கிங் விடியோ!

தொடர்ந்து, இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தயாரிப்பில் பாலிவுட்டில் மடோன் அஸ்வின் படம் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது.

அடுத்ததாக, எந்த நடிகருடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நடிகர் விக்ரமை வைத்து மடோன் அஸ்வின் புதிய படத்தை இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ரிலீஸ் தேதி!

தனுஷ் இயக்கத்தில் உருவாகும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.நடிகர் தனுஷ் இயக்கத்தில் இன்றைய இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்... மேலும் பார்க்க

6 நாள்களில் ரூ. 1000 கோடி! புஷ்பா - 2 சாதனை!

புஷ்பா - 2 திரைப்படம் ரூ. 1000 கோடியை வசூலித்துள்ளது.நடிகர் அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புஷ்பா இரண்டாம் பாகம் திரையரங்குகள... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: அருணுக்கு ஆதரவாக களமிறங்கிய செளந்தர்யா!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத வகையில் அருண் பிரசாத்துக்கு நடிகை செளந்தர்யா ஆதரவு தெரிவித்துள்ளார்.பிக் பாஸ் வீட்டில் அருணின் செயல்களை செளந்தர்யாவும், செளந்தர்யாவின் செயல்களை அருண் பிரச... மேலும் பார்க்க

ஏ. ஆர். ரஹ்மான், அனிருத் வரிசையில் சாய் அபயங்கர்?

சாய் அபயங்கர் அடுத்த தலைமுறை இசையமைப்பாளராக உருவெடுத்து வருகிறார்.தமிழ் சினிமாவில் தலைமுறை இடைவெளிகளில் இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான், அனிருத் என இம்மூவரும் தங்களுக்கான இடங்களைப் பிடித்தவர்கள். இதில், இளை... மேலும் பார்க்க

பிக் பாஸ் விளையாட்டைக் கெடுப்பவர் முத்துக்குமரன்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் விளையாட்டைக் கெடுக்கும் வகையிலான வேலைகளில் முத்துக்குமரன் ஈடுபடுவதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10வது வாரத்தில் தொழிலாளர... மேலும் பார்க்க

பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜூ!

நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே மூலம் முன்னணி நாயகனாகவும் கவனம் ஈர்த்துள்... மேலும் பார்க்க