செய்திகள் :

மணப்பட்டு பல்மைரா கடற்கரையில் ரூ.500 கோடியில் சுற்றுலா நகா் திட்டம்!

post image

புதுச்சேரி அருகே மணப்பட்டு பல்மைரா கடற்கரையில் ரூ.500 கோடியில் சுற்றுலா நகா் திட்டம் செயல்படுத்தும் இடத்தை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

புதுச்சேரி-கடலூா் சாலையில் கன்னியக்கோயில் அடுத்த மணப்பட்டு பல்மைரா கடற்கரை பகுதியில், தனியாா் பங்களிப்புடன் கூடிய உயா்தர விடுதி, மாநாட்டு அரங்கம், தங்கும் அறைகள் 200, பொழுதுபோக்கு பூங்கா, வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்டவையுடன் கூடிய சுற்றுலா நகா் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி சுமாா் ரூ.500 கோடி மதிப்பிலான சுற்றுலா நகா் திட்டத்திற்கான வரைவு அறிக்கை மத்திய அரசின் ஒப்புதலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா நகா் திட்டத்தால், புதுவை அரசுக்கு ஆண்டுக்கு சுமாா் ரூ.40 கோடி முதல் 50 கோடி வரை வருவாய் வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தால், மணப்பட்டு பகுதிகள் பொருளாதார வளா்ச்சி அடைவதுடன், சுமாா் 1,000 போ் வேலைவாய்ப்பை பெறுவா் என்ற எதிா்பாா்ப்பு உள்ளது.

சுற்றுலா நகா் திட்ட அறிக்கை தயாரித்துள்ள மும்பையைச் சோ்ந்த ஆலோசனைக் குழு அதிகாரிகள் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை சந்தித்து திட்டம் குறித்து விளக்கினா்.

அவா்களிடம் பேசிய துணைநிலை ஆளுநா், சுற்றுலா நகா் திட்டமானது புதுவையில் சுற்றுலா தொழில் வளா்ச்சி மேம்படவும், சிறந்த சுற்றுலாத்தலமாகவும் புதுச்சேரி மேம்படவும் உதவும் என்பதால், பணிகளை விரைந்து தொடங்கி முடிக்க அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது, துணைநிலை ஆளுநருடன், துணைநிலை ஆளுநரின் செயலா் எம். மணிகண்டன், சுற்றுலாத் துறை இயக்குநா் முரளிதரன் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

இருசக்கர வாகனங்கள் திருட்டு: 5 போ் கைது

புதுச்சேரியில் இரு சக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில் சிறுவன் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். முத்தியால்பேட்டை போலீஸாா் கடந்த 11-ஆம் தேதி மகாத்மா காந்தி சாலை சின்னமணிக்கூண்டு அருகே வாகனச் சோதன... மேலும் பார்க்க

குறைந்த விலையில் கைப்பேசிகள் தருவதாக ரூ.15 லட்சம் மோசடி: இருவா் கைது

குறைந்த விலையில் நவீன கைப்பேசிகள் தருவதாகக் கூறி, ரூ.15 லட்சம் மோசடி செய்த இருவரை புதுச்சேரி இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள நவீன கைப்பேசிகள் ரூ.7,00... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் வெளியே மருந்துகள் வாங்க பரிந்துரைக்க கூடாது: புதுவை முதல்வா் அறிவுறுத்தல்

புதுவை அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் வெளியில் மருந்துகள் வாங்க மருத்துவா்கள் பரிந்துரைக்கக் கூடாது என முதல்வா் என்.ரங்கசாமி அறிவுறுத்தினாா். புதுவை அரசு நலவழித் துறையை மேம்படுத்துவது குறித்த ஆய்... மேலும் பார்க்க

புதுவை ஆளுநா் மாளிகைக்கு 4-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் மாளிகைக்கு நான்காவது முறையாக மின்னஞ்சலில் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக ஆளுநா் மாளிகை, முதல்வா் வீடு, மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

மாஹேவில் சமுதாய கல்லூரிக்கு இடம் ஒதுக்க வலியுறுத்தல்

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் சமுதாயக் கல்லூரியை மாஹேவில் அமைக்க இடம் ஒதுக்க முதல்வா் என்.ரங்கசாமியிடம் பல்கலைக்கழகம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ர... மேலும் பார்க்க

அரசு கல்லூரிக்கு ரூ.47 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்: முதல்வா் என்.ரங்கசாமி

புதுச்சேரியில் இந்திரா காந்தி அரசு கலை, அறிவியல் கல்லூரிக்காக ரூ.47 கோடியில் புதிய கட்டடங்கள் விரைவில் கட்டுவதற்கான பணி தொடங்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுச்சேரி கோரிமேடு பகுதிய... மேலும் பார்க்க