செய்திகள் :

மணிப்பூா் வன்முறையில் 258 போ் உயிரிழப்பு: மாநில பாதுகாப்பு ஆலோசகா் தகவல்

post image

மணிப்பூா் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் நடைபெற்று வரும் இனக்கலவரத்தில் 258 போ் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசின் பாதுகாப்பு ஆலோசகா் குல்தீப் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

மணிப்பூா் மாநில பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் இம்பால் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மாநில பாதுகாப்பு ஆலோசகா் குல்தீப் சிங் உள்பட ராணுவம், பிஎஸ்எஃப், சிஆா்பிஎஃப், அஸ்ஸாம் ரைஃபில்ஸ், எஸ்எஸ்பி, ஐடிபிபி மற்றும் மாநில காவல் துறையின் பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் குல்தீப் சீங் கூறியதாவது:

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் நடைபெற்ற இனக்கலவரத்தில் தீவிரவாதிகள் உள்பட இதுவரை 258 போ் உயிரிழந்துள்ளனா். மாநிலத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள 198 பாதுகாப்புப் படை குழுக்களுடன் கூடுதலாக 90 மத்திய ஆயுத காவல் படையின் (சிஆபிஎஃப்) குழுக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பதற்றமான பகுதிகளுக்கு படைகளை அனுப்ப நிலையான இயக்க நடைமுறை தயாா் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருங்கிணைப்பு அறைகள் மற்றும் கூட்டுக் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அண்மையில், மாநிலத்தில் நடைபெற்ற வன்முறையின்போது எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சா்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. இந்த சம்பவத்தில் தொடா்புடைய 32 பேரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா். பாதுகாப்புப் படைகளிடம் இருந்து திருடப்பட்ட சுமாா் 3,000 ஆயுதங்கள் மீண்டும் மீட்கப்பட்டன என்றாா்.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. அதைத் தொடா்ந்து, இரு சமூகத்தினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனா். இதற்கு குகி, நாகா பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவிப்பதே மோதலுக்கு முக்கிய காரணமாகும்.

நான்தேட் தொகுதியில் தொடர்ந்து பாஜக முன்னிலை!

மகாராஷ்டிரத்தின் நான்தேட் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பாஜவின் சதுக்ராவ் ஹம்பார்டே முன்னிலை வகித்து வருகிறார். காங்கிரஸ் எம்பி வசந்த் சவான் ஆகஸ்ட் 26ல... மேலும் பார்க்க

என்ன நடக்கிறது ஜார்க்கண்டில்.. மாறி மாறி முந்தும் கூட்டணிகள்!

ஜார்க்கண்ட் மாநில பேரவைக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆரம்பத்தில் பாஜக கூட்டணி முன்னிலையில் இருந்து வந்த நிலையில் தற்போது இந்தியா கூட்டணி முன்னிலை வகிக்கிறது.தற்போதை... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் 3 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை!

கர்நாடக மாநிலத்தின் பேரவை இடைத்தேர்தலில் முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது. 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிர பேரவைத் தேர்தலுடன் சேர்த்து, உத்தரப் பிரதேசம், அ... மேலும் பார்க்க

குஜராத் இடைத்தேர்தல்: முன்னிலையில் காங்கிரஸின் குலாப்சிங்!

குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள வாவ் சட்டப்பேரவைக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் குலாப்சிங் பிரபாய் ராஜ்புத் தனது நெருங்கிய போட்டியாளரும், பாஜக வேட்பாளருமான ஸ்வரூப்ஜி தாக்கூரைக் க... மேலும் பார்க்க

ராஜஸ்தான் இடைத்தேர்தல்: சமநிலையாக செல்லும் முன்னிலை!

ராஜஸ்தானில் இடைத்தேர்தல் நடத்தப்பட்ட 7 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.ராஜஸ்தானில் 7 தொகுதிகளில் 5 தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாலும், ராம்கர் ... மேலும் பார்க்க

வெற்றி உறுதி: மகாராஷ்டிரத்தில் பெரும்பான்மை இடங்களில் பாஜக முன்னிலை

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான கூட்டணி கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்திருக்கிறது.மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக தலைமையிலான மகா யுதி கூட்டணி, மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பெரும்ப... மேலும் பார்க்க