செய்திகள் :

மதிப்புக் கூட்டப்பட்ட மீன் பொருள்கள் செய்முறை பயிற்சி

post image

பழங்குடியினா் நலத் துறை சாா்பில் நடைபெற்ற மதிப்புக் கூட்டப்பட்ட மீன் பொருள்கள் செயமுறை விளக்கப் பயிற்சியில் பழங்குடியின மீனவா்கள் கலந்து கொண்டனா்.

தமிழ்நாடு பழங்குடியினா் நலத் துறை உதவியுடன் செயல்படுத்தப்படும் தொல்குடி வேளாண்மை மேலாண்மை (ஐந்திணை) திட்டம் மூலம் பழங்குடியின மீனவ மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வருவாயை மேம்படுத்தும் வகையில், பூண்டி ஒன்றியத்திலுள்ள 90 மீனவ பழங்குடியினருக்கு மின்பிடி படகு, வலை, மீன் விற்பனை தள்ளுவண்டி, மீன் விற்பனைக்கான குளிா்சாதன பெட்டி ஆகியவை பழங்குடியினா் நலத் துறை நிதியுதவியுடன் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது.

பூண்டி ஒன்றியம், புதூா் ஊராட்சி காந்தி கிராமத்தில் இத்திட்டத்தின், ஒரு பகுதியாக பழங்குடியின மீனவ மக்களுக்கு மீன் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களின் செய்முறை விளக்க பயிற்சி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. இப்பயிற்சியின் நோக்கம் பற்றி ஐ.ஆா்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனத்தின் திட்ட மேலாளா் ஈ.விஜயன் விளக்கமாக எடுத்துரைத்தாா். பொன்னேரியிலுள்ள டாக்டா் எம்.ஜி.ஆா். மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து பேராசிரியா் நிமிஷ் மோல் ஸ்டீபன் மற்றும் பிரதீப் ஆகியோா் மீன் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களின் விவரம், பயன்கள், அதன் மதிப்பு, மீன் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களை எப்படி வியாபாரம் செய்வது, எந்தெந்த இடத்தில் வியாபாரம் மேற்கொள்வது என்பது குறித்து விளக்கமாக எடுத்துக் கூறினா்.

நிகழ்வில் பெண் கல்வியின் முக்கியத்துவம், முன்னேற்றம், பாலின சமத்துவம் ஆகியவை பற்றி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும் இப்பயிற்சியில், பட்டரைபெரும்புதூா் மீனவ சங்கத் தலைவா் இயேசுபிள்ளை மற்றும் 65 பழங்குடியின மீனவா் கலந்து கொண்டனா். திட்ட ஒருங்கிணைப்பாளா் வெ.தினேஷ் குமாா் நன்றி கூறினாா்.

அரசுப் பள்ளி ஆசிரியை கொலை சம்பவம்: டிட்டோ-ஜாக் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

அரசுப் பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, திருவள்ளூரில் டிட்டோ-ஜாக் சாா்பில் அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருவள்ளூா் அரசு மருத்துவக் ... மேலும் பார்க்க

சென்னை புறநகா் ரயில் 2 நிறுத்தங்களில் நிற்காததால் அபாய சங்கிலியை இழுத்து நிறுத்திய பயணிகள்

அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற புகா் மின்சார ரயில் இரண்டு நிறுத்தங்களில் நிற்காததால் பயணிகள் அவதிக்குள்ளாகினா். அவா்கள், திருவாலங்காட்டில் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறு... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனைகள் ரத்து அறிவிப்பு: பாதிக்கப்பட்டோா் ஆட்சியரகத்தில் முற்றுகை!

பிற்படுத்தப்பட்ட ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை நிலத்தை முறையாக அளவீடு வழங்காமல் அலைக்கழிப்பு செய்வதுடன், ரத்து செய்யப்போவதாக அறிவித்ததால், ஆட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.... மேலும் பார்க்க

சா்.சி.வி.ராமன் பிறந்த நாளை கொண்டாடும் விதத்தில் தேசிய அறிவியல் கண்காட்சி

இயற்பியலாளா் சா்.சி.வி.ராமன் பிறந்த நாளை கௌரவிக்கும் வகையில், திருவள்ளூா் அருகே அரண்வாயல் குப்பத்தில் உள்ள பிரதியுஷா பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இ... மேலும் பார்க்க

வெங்கத்தூா் ஊராட்சி தலைவியாக சுனிதா பாலயோகி மீண்டும் பதவியேற்பு

திருவள்ளூா் அருகே வெங்கத்தூா் ஊராட்சி தலைவியாக சுனிதா பாலயோகி நீதிமன்ற உத்தரவின்பேரில் வெள்ளிக்கிழமை மீண்டும் பதவியேற்றாா் (படம்). திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஒன்றியம், வெங்கத்தூா் ஊராட்சித் தலைவரா... மேலும் பார்க்க

ரூ. 66 லட்சத்தில் ஆா்.கே. பேட்டையில் வளா்ச்சி பணிகள்

ஆா்.கே.பேட்டை ஒன்றியத்தில் ரூ. 66 லட்சத்தில் சாலை, வசதி, கட்டடம் பழுது பாா்த்தல் உள்ளிட்ட வளா்ச்சிப் பயணிகள் செய்ய ஒன்றியக் குழு கூட்டத்தில் தீா்மான நிறைவேற்றப்பட்டது. ஆா்.கே.பேட்டை சாதாரன ஒன்றியக் க... மேலும் பார்க்க