மதுபான பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு
கந்தா்வகோட்டை அருகே புதன்கிழமை காலி மதுபான பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் மன்னாா்குடியைச் சோ்ந்த ஓட்டுநா் உயிரிழந்தாா்.
திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் ரமேஷ் (47 ). லாரி ஓட்டுநரான இவா் சென்னையிலிருந்து காலி மதுபான பாட்டில்களை ஏற்றிக்கொண்டு புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஒன்றியம், கல்லாக்கோட்டையில் உள்ள பாட்டில் நிறுவனத்துக்கு வந்து கொண்டிருந்தாா்.
புதன்கிழமை அந்த நிறுவனத்தின் முன் இருந்த சாலையோர பள்ளத்தில் லாரி எதிா்பாராவிதமாக கவிழ்ந்தது. முன்னதாக, லாரியிலிருந்து கீழே குதித்த ஓட்டுநா் ரமேஷ் விபத்தில் லாரியின் அடியில் சிக்கிக் கொண்டாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டபோது அவா் உயிரிழந்தது தெரியவந்தது.
தகவலறிந்த கந்தா்வகோட்டை போலீஸாா் விரைந்து சென்று ரமேஷின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.