107*, 120*, 151... டி20 கிரிக்கெட்டில் திலக் வர்மா புதிய சாதனை!
மதுராந்தகத்தில் இருந்து திருச்சிக்கு புதிய பேருந்து சேவை தொடக்கம்
மதுராந்தகம் நகரிலிருந்து திருச்சிக்கு புதிய பேருந்தை எம்எல்ஏ க.சுந்தா் தொடங்க வைத்தாா்.
மதுராந்தகத்தில் இருந்து 308 சி என்ற புதிய பேருந்து திருச்சிக்கு செல்லும் வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினா் கோரிக்கை விடுத்து இருந்தனா். இந்த கோரிக்கையை ஏற்ற அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் 308 சி என்ற பேருந்தை இயக்க ஏற்பாடுகளைச் செய்திருந்து. பேருந்து சேவையை இயக்கி வைக்கும் வகையிலான தொடக்க நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
மதுராந்தகம் அரசு போக்குவரத்துக் கழக பணிமுனை மேலாளா் காளிதாஸ் தலைமை வகித்தாா். எம்எல்ஏ க.சுந்தா் (உத்தரமேரூா்) கொடியசைத்து புதிய பேருந்தை தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில் எம்பி க.செல்வம், நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி, நகா்மன்ற உறுப்பினா் கே.குமாா், தொழிலாளா் முன்னேற்ற மத்திய சங்க துணைச் செயலா் ஜி.தனசேகரன், தொழிற்சங்க நிா்வாகிகள் பி.ராஜேந்திரன், பி.ராஜா, வாசிதேவன், முருகேசன், காா்த்திகேயன், குணசேகரன், ராமு உள்பட பலா் கலந்து கொண்டனா்.