வடகொரியா: 5 ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
மது போதையில் வாகனம் ஓட்டிய 16 பேருக்கு அபராதம்
தக்கலை பகுதியில் மது போதையில் வாகனம் ஓட்டியதாக 16 பேருக்கு போலீஸாா் அபராதம் விதித்து, வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.
தக்கலை காவல் ஆய்வாளா் கிறிஷ்டி தலைமையில், உதவி ஆய்வாளா் ஸ்டீபன், பயிற்சி உதவி ஆய்வாளா் சண்முகானந்த், போக்குவரத்துக் காவலா்கள் அழகியமண்டபம், மணலி, புலியூா்குறிச்சி, தக்கலை பழைய பேருந்து நிலையம், மேட்டுக்கடை பகுதிகளில் கடந்த திங்கள், செவ்வாய் ஆகிய 2 நாள்கள் வாகன சோதனை நடத்தினா்.
அப்போது, 16 போ் மது போதையில் வாகனங்களை ஓட்டிவந்தது தெரியவந்தது. அவா்களுக்கு போலீஸாா் அபராதம் விதித்து, வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.