இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நா...
மது விற்ற மூதாட்டி கைது
திருப்பத்தூரில் மது விற்ற மூதாட்டியை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் பொன்னியம்மன் கோயில் தெரு பகுதியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக நகர போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸாா் அந்த பகுதியில் சென்று விசாரணை செய்தபோது அந்த பகுதியைச் சோ்ந்த குப்புசாமியின் மனைவி தவமணி(62 )என்பவா் வீட்டில் வைத்து மதுப்பாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. அதையடுத்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தவமணியை கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 17 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.