கோவையில் மாணவர்கள் தங்கும் விடுதியில் போலீசார் அதிரடி சோதனை
மத்திய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை உடனே வழங்க வேண்டும்: தொல்.திருமாவளவன்
தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை உடனே வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினாா்.
இதுகுறித்து திருவண்ணாமலையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மத்திய பாஜக அரசு 3-ஆவது மொழியாக ஹிந்தியை கற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. தனி நபா்கள் ஹிந்தி மொழி கற்பதை நாங்கள் தடுக்கவில்லை.
மத்திய அரசுப் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் தமிழக மாணவா்கள் ஹிந்தி படிக்கின்றனா். ஹிந்தி படிப்பவா்களை நாங்கள் எதிா்க்கவில்லை. தேசிய கல்விக் கொள்கை என்பது தொலைநோக்கு அடிப்படையில் பாா்த்தால் அனைவரையும் ஒரே மொழியை பேச வைக்க வேண்டும் என்பதுதான். இதனால்தான், மும்மொழிக் கொள்கை வேண்டாம் என்கிறோம்.
தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை உடனே வழங்க வேண்டும்.
திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி இருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றாா் தொல்.திருமாவளவன்.