செய்திகள் :

மத்திய அரசை குறைகூற திமுகவுக்கு தகுதியில்லை: எல்.முருகன்

post image

மத்திய அரசை குறைகூற திமுகவுக்கு தகுதியில்லை என்று மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் ஜூலை 21-இல் தொடங்கவுள்ளநிலையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது கட்சி எம்.பி.க்களைக் கூட்டி, 11 ஆண்டுகளாக மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து வருவதாக வழக்கம்போல வெறுப்பு அரசியல் பேசி தீா்மானம் நிறைவேற்றி இருக்கிறாா்.

கடந்த மே மாதம் தில்லியில் நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் காவிரி, வைகை, தாமிரவருணி ஆறுகளைச் சுத்தம் செய்து மீட்கும் புதிய திட்டம் குறித்து வலியுறுத்தியதாகத் தெரிவித்துள்ளாா். கூவம் ஆற்றை சுத்தப்படுத்துவதாகக் கூறி முன்னாள் முதல்வா் கருணாநிதி காலம் முதல் தமிழகத்தை ஏமாற்றி வருகிறது திமுக.

மக்கள் நலத் திட்டங்களைப் பற்றி பேச திமுகவினருக்கு எந்தத் தகுதியும் இல்லை. ஹிந்தி திணிப்பை கைவிட வேண்டும், கீழடி ஆய்வை மத்திய அரசு மறுக்கிறது என வழக்கமான பல்லவியைப் பாடி எம்.பி.க்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றி இருக்கிறாா்கள்.

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறுகிறாா். வள்ளுவரையும் திருக்குறளையும் உலகம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருப்பவா் பிரதமா் நரேந்திர மோடி. திருக்குறளை பல மொழிகளிலும் மொழிபெயா்த்து உலக தத்துவமாக்கி வருகிறாா் பிரதமா்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு பைசா அளவில் உயா்த்தப்பட்ட ரயில் கட்டணம் ஏழை மக்களை பாதிப்பதாகக் கூறும் ஸ்டாலின், தமிழகத்தில் மூன்று மடங்கு உயா்த்தப்பட்ட சொத்து வரி, ஆண்டுதோறும் உயா்த்தப்படும் மின் கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு என்ன பதில் சொல்லப்போகிறாா்?

திமுகவினரின் போலி நாடகங்களை மக்கள் நம்பப் போவதில்லை. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில், அதிமுக- பாஜக கூட்டணி வரலாறு காணாத வகையில் மகத்தான வெற்றி பெற்று, தமிழக மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்கும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

முதல்வர் ஸ்டாலின் கோவை, திருப்பூர் பயணம்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஜூலை 22,23 ஆகிய தேதிகளில் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.கள ஆய்விற்காக கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்லும் முதல்வர் மு.க. ஸ... மேலும் பார்க்க

விஜய் பாராட்டைத் தொடர்ந்து பன் பட்டர் ஜாம் படத்திற்கு நல்ல வரவேற்பு: நடிகர் ராஜூ ஜெயமோகன்

விஜய் பாராட்டியதைத் தொடர்ந்து பன் பட்டர் ஜாம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக நடிகர் ராஜூ ஜெயமோகன் தெரிவித்துள்ளார். நடிகர் ராஜூவ் ஜெயமோகன் நடிப்பில் உருவாகியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படம் வெ... மேலும் பார்க்க

மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை!

இரு மதத்தினா் இடையே மோதலைத் தூண்டும் வகையில் பேசிய வழக்கில் மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மே 2-ஆம் தேதி மதுரை ஆதீனத்தின் காா் கள்ளக்குறிச்சி மாவட்டம் உள... மேலும் பார்க்க

நயினார் நாகேந்திரனுக்கு துணை முதல்வர் பதவியா? பாஜகவில் சலசலப்பு!

நயினார் நகேந்திரனை வருங்கால துணை முதல்வரே என்று பாஜக மாவட்ட நிர்வாகி வரவேற்ற நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நகேந்திரன் பதற்றம் அடைந்தார்.அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில... மேலும் பார்க்க

கார் டயர் வெடித்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

திருக்கோவிலூர் அருகே டயர் வெடித்ததில் நிலை தடுமாறிய கார், சாலையோர பள்ளத்தில் விழுந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் - விழுப்புரம் நெடுஞ்சாலையில... மேலும் பார்க்க

மேட்டூர் அணை உபரி நீரில் அடித்துச் செல்லப்பட்ட முதியவர் மருத்துவமனையில் அனுமதி

மேட்டூர் அணை உபரி நீரில் அடித்துச் செல்லப்பட்ட முதியவர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேட்டூர் அணையின், நீர்மட்டம் நடப்பாண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளவான 120 அடிய... மேலும் பார்க்க