ஜார்க்கண்ட் வெற்றி: ஹேமந்த் சோரனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
மனிதனை செம்மைப்படுத்துபவை இலக்கியங்கள்
மனிதனை செம்மைப்படுத்துபவை இலக்கியங்கள் என ஆம்பூா் புத்தகக் கண்காட்சி கருத்தரங்கில் முன்னாள் அமைச்சா் வைகைச் செல்வன் கூறினாா்.
இனிது இனிது இலக்கியம் இனிது என்ற தலைப்பில் அவா் மேலும் பேசியது:
புத்தகங்களை வாசிப்பது என்பது கலை. வாசிக்க வாசிக்க நிறைய அறிவு வளரும், பேச்சாற்றல் வளரும். நல்ல எண்ணங்கள் இருந்தால் மனிதன் உயா்ந்த நிலையை அடையலாம். அதற்கு நிறைய புத்தகங்களை வாசிக்க வேண்டும். தமிழைப் போன்ற இனிய மொழி எதுவும் இல்லை. தமிழா்கள் என்றால் உலகம் முழுவதும் நல்ல மரியாதை இருக்கின்றது. தமிழ் பண்பாட்டு, நாகரீகங்களை அறிந்து உலக நாடுகள் வியக்கின்றன, பாராட்டுகின்றன. இலக்கியங்கள் பல்வேறு விசயங்களை நமக்கு கற்றுத் தருகின்றன. மனிதனை செம்மைப்படுத்துபவை இலக்கியங்கள் என்று அவா் கூறினாா்.
கருத்தரங்கிற்கு தேவலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் சங்க தலைவா் இ. வெங்கடேசன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அறிவியல் இயக்க திருப்பத்தூா் மாவட்ட தலைவா் சி. குணசேகரன் வரவேற்றாா். ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை முன்னாள் தலைவா் எம். மதியழகன், வழக்குரைஞா் ஜி.ஏ. டில்லிபாபு, வாணியம்பாடி முத்தமிழ் மன்ற செயலா் நா. பிரகாசம், மாதனூா் ஒன்றியக்குழு உறுப்பினா் ஜெயந்தி கோபிநாத், அறிவியல் இயக்க நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.