ரூ.75 லட்சம் கடன்.. 5 கொலைகள்.. 23 வயது இளைஞன் கொலைகாரனாக மாறியது ஏன்?
மன்னத் பங்களாவை காலி செய்து ரூ.24 லட்சம் வாடகையில் புதிய வீட்டில் குடியேறும் நடிகர் ஷாருக்கான்!
மும்பை பாந்த்ராவில் கடற்கரையையொட்டி இருக்கும் நடிகர் ஷாருக்கானின் மன்னத் பங்களா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. மன்னத் பங்களா ஒரு செல்பி எடுக்கும் இடமாக இருக்கிறது. இந்த பங்களாவை ஷாருக்கான் புதுப்பித்து நீட்டித்து கட்ட முடிவு செய்துள்ளார்.
எனவே அந்த பங்களாவை காலி செய்துவிட்டு இரண்டு ஆண்டுகள் வேறு இடத்தில் குடும்பத்தோடு தங்க முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் வசிக்கும் பாந்த்ரா பகுதியில் உள்ள பாலிஹில் பகுதியில் கட்டப்பட்டுள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் 4 மாடிகளை ஷாருக்கான் வாடகைக்கு எடுத்து இருக்கிறார். ஒவ்வொரு மாடியும் ஒரு வீடாக கட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர் வாசு பாக்னானி கட்டி இருக்கிறார். இதற்காக ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் வாசுவின் மகன் ஜாக்கி மற்றும் மகள் தீப்ஷிகா தேஷ்முக் ஆகியோருடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

தனது பாதுகாப்பு ஊழியர்கள், சமையல்காரர்கள் ஆகியோரும் தங்கவேண்டும் என்று கருதி ஷாருக்கான் 4 மாடிகளை எடுத்திருக்கிறார். இதற்காக அவர் ஒவ்வொரு மாதமும் ரூ.24 லட்சம் வாடகையாக கொடுப்பார். மன்னத் பங்களாவில் மேலும் இரண்டு மாடிகள் கட்ட ஷாருக்கான் திட்டமிட்டுள்ளார். இதற்காக ஷாருக்கான் மனைவி கெளரி கான் மகாராஷ்டிரா கடற்கரையோர மண்டல நிர்வாக ஆணையத்திடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்திருந்தார். தற்போது அதற்கு ஒப்புதல் கிடைத்திருப்பதால் வரும் மே மாதத்தில் இருந்து கட்டுமானப்பணிகள் தொடங்க இருக்கிறது.
எனவே மே மாதம் ஷாருக்கான் தற்போது இருக்கும் வீட்டை காலி செய்துவிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு புதிய வீட்டிற்கு செல்ல இருக்கிறார். ஷாருக்கான் புதிதாக குடியேற இருக்கும் பூஜா காசா என்ற கட்டடத்தில் 1,2 மாடிகள் இணைத்து கட்டப்பட்டுள்ளது. இதனை வாடகைக்கு எடுத்திருக்கிறார். இது தவிர 7,8வது மாடிகளையும் ஷாருக்கான் வாடகைக்கு எடுத்திருக்கிறார். மொத்தம் 3 ஆண்டுகளுக்கு ரூ.8.67 கோடிக்கு வாடகைக்கு எடுத்திருக்கிறார். பாலிவுட் பிரபலங்கள் வீடு, அலுவலங்களை வாடகைக்கு விட்டு அதிக அளவில் சம்பாதிக்கின்றனர். இதில் அமிதாப்பச்சன் முன்னிலையில் இருக்கிறார். நடிகர் ரன்பீர் கபூர் புனேயில் டிரம்ப் டவர் வீட்டை மாதம் 4 லட்சத்திற்கு வாடகைக்கு விட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
