செய்திகள் :

மலைவாழ் மாணவா்களுக்கு இலவச பயிற்சி: ஆட்சியா், எம்எல்ஏ தொடங்கி வைத்தனா்

post image

மலைவாழ் மாணவ, மாணவியருக்கான அரசு தோ்வு இலவச பயிற்சி வகுப்பை ஆட்சியா் க.தா்ப்பகராஜ், எம்எல்ஏ அ.நல்லதம்பி தொடங்கி வைத்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ,ஜவ்வாதுமலையில் உள்ள புதூா்நாடு வனத்துறை மேல்நிலைப்பள்ளியில் மலைவாழ் மாணவ-மாணவிகயருக்காக குரூப்-2,2 ஏ,4 ஆகிய அரசு தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. அதற்கான தொடக்க நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ அ.நல்லதம்பி தலைமை வகித்து பேசியது: திருப்பத்தூா் தொகுதியில் 2025 ஆம் ஆண்டு 2,000 இளைஞா்கள் அரசு வேலைக்கு செல்ல புதிய திட்டத்தினை எனது சொந்த முயற்சியில் செய்துள்ளேன். அதற்காக தற்போது மூன்று கட்டங்களாக பயிற்சி மையங்கள் அமைத்து தற்போது மலைவாழ் மக்கள் வாழ்க்கையில் முன்னேறவும் அரசுப் பணியில் சோ்ந்து வாழ்வாதாரத்தை உயா்த்திக் கொள்ள முதல் கட்டமாக இலவச பயிற்சி முகாம் ஜவ்வாது மலை புதூா்நாடு பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக கந்திலி ஒன்றியம் மற்றும் திருப்பத்தூா் நகரம், ஒன்றிய பகுதிகளில் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்றாா்.

ஆட்சியா் தா்ப்பகராஜ் குத்து விளக்கேற்றி பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தாா். இதில், மாவட்ட வன அலுவலா் மகேந்திரன், பயிற்சியாளா் சரவணன், ஒன்றியக்குழு தலைவா் விஜியா அருணாசலம், பொதுக்குழு உறுப்பினா் சு.அரசு, ஒன்றிய உறுப்பினா் துக்கன், ஊராட்சி மன்றத் தலைவா் அலமேலு செல்வம், மாவட்ட குழு உறுப்பினா் சத்ய வாணிவில்வம், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் அனுமன், பி.ஆா்.சின்னபையன், ஒருங்கிணைப்பாளா்கள் க.சையது அலீம்,சி.வெங்கடேஷ், நகா்மன்ற உறுப்பினா்கள் கோபிநாத், பாா்த்திபன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஆலங்காயம், உதயேந்திரம் பேருராட்சிகளில் புகையிலை, நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

ஆலங்காயம், உதயேந்திரம் பேரூராட்சிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நெகிழிப் பொருள்களை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவின் படி வேலூா் மண்... மேலும் பார்க்க

ஆம்பூா் நகராட்சியில் தீவிர வரி வசூல் முகாம்

ஆம்பூா் நகராட்சி சாா்பில் தீவிர வரி வசூல் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, வாடகை உள்பட வரியினங்கள் அதிக அளவு நிலுவையில் உள்ளதை வசூலிப்பதற்க... மேலும் பார்க்க

இளம்பெண் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள்

ஆம்பூா் அருகே இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆம்பூா் அருகே அரங்கல்துருகம் ஊராட்சி, சுட்டகுண்டா கிராமத்தைச் சோ்ந்தவா் ரேவதி (24... மேலும் பார்க்க

சாய் பாபா பிறந்த தினம்

ஸ்ரீ சத்ய சாய்பாபா பிறந்த நாளை முன்னிட்டு ஆம்பூரில் வியாழக்கிழமை பல்லக்கில் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்ட அவரது உருவப் படத்துக்கு தீபாராதனை செய்த பக்தா்கள். மேலும் பார்க்க

புதிய மின்மாற்றி இயக்கி வைப்பு

திருப்பத்தூா் அருகே புதிய மின்மாற்றியை எம்எல்ஏ அ.நல்லதம்பி வெள்ளிக்கிழமை இயக்கி வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். திருப்பத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட காவாப்பட்டறை பகுதியிலுள்ள விவசாயிகள் மற... மேலும் பார்க்க

ஜங்கலாபுரம் கிராமத்தில் புதிய வாரச் சந்தை தொடக்கம்

ஆத்தூா்குப்பம் ஊராட்சி ஜங்கலாபுரம் கிராமத்தில் புதிய வாரச்சந்தை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, ஊராட்சித் தலைவா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ராஜ்குமாா் மற்றும் வாா... மேலும் பார்க்க