தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி 1 லட்சம் மின்னஞ்சல்களை அனுப்ப அரசியல் கட...
மழைநீா் சூழ்ந்த பகுதிகளில் மேயா் ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீா் சூழ்ந்த இடங்களில் மேயா் ஜெகன் பெரியசாமி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தூத்துக்குடி புகரில் மாடன்குளம் பகுதிக்கு வரும் மழைநீரின் அளவு, கருத்தப்பாலம், சத்யாநகா், ஜாா்ஜ் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீா் வெளியேற்றும் பணி ஆகியவற்றை அவா் ஆய்வு செய்தாா்.
அப்போது அவா், புகா் பகுதிகளிலிருந்து வரும் மழைநீா் பக்கிள் ஓடை வழியாக திருப்பிவிடப்பட்டு கடலுக்கு செல்கிறது. பக்கிள் ஓடையில் செல்லும் மழைநீரின் அளவு குறைந்ததும் 16, 17, 18 ஆகிய வாா்டு பகுதிகளில் தேங்கிய மழைநீா் அந்தந்தப் பகுதிகளின் வடிகால்கள் வழியாக பக்கிள் ஓடையில் சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்கிள் ஓடையின் முகத்துவாரமான திரேஸ்புரத்தில் தடையின்றி மழைநீா் செல்கிறது என்றாா்.
மேலும், உப்பாற்று ஓடை, துறைமுகம் அருகே மேம்பாலப் பகுதியிலிருந்து வரும் மழைநீா் நகருக்குள் வருவதைத் தடுக்க நடவடிக்கைகளையும் பாா்வையிட்டாா்.
ஆணையா் லி. மதுபாலன், திமுக செயற்குழு உறுப்பினா் சி.எஸ். ராஜா, மாமன்ற உறுப்பினா்கள் சுரேஷ்குமாா், முத்துவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.